“மருத்துவர்களின் நிலை இதுதான்; விக்னேஷ் கோபத்தில் கொஞ்சம் கூட நியாயம் இல்லை” - மருத்துவர் சாந்தி!

சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் தலைமை மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பாக நம்மிடையே பேசுகிறார் மருத்துவர் சாந்தி.
மருத்துவர் சாந்தி
மருத்துவர் சாந்திபுதிய தலைமுறை
Published on

சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் தலைமை மருத்துவர் பாலாஜியை, நோயாளியின் மகனொருவர் நேற்று கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், விக்னேஷுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க, சார்பாக மருத்துவர் சாந்தி நம்மிடையே சில முக்கியமான விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அதை பார்க்கலாம்....

கேள்வி : கிண்டி அரசு மருத்துவமனை நோயாளியின் மகன் (பெயர், விக்னேஷ்), தன் தாய்க்கு மருத்துவம் பார்த்த மருத்துவரை கத்தியால் குத்தி இருக்கிறார். அதேநேரம் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மனநல மருத்துவர் மீது நோயாளியொருவர் தாக்குதல் நடத்தியுள்ளார். இதுபற்றிய உங்கள் பார்வை என்ன?

பதில்: “கிண்டி சம்பவத்தை பொறுத்தவரை அதை கத்திக்குத்து என சொல்வதைவிட கொலை முயற்சி என்றே சொல்லலாம். அந்த மருத்துவமனையில் மிகச்சிறந்த மருத்துவர்கள் இருந்ததால் அந்த மருத்துவரின் உயிர் காப்பாற்றப்பட்டது. நல்வாய்ப்பாக உயிர்தப்பினார் என்றுதான் சொல்லவேண்டும்.

மருத்துவர் சாந்தி
மருத்துவர் சாந்தி

இந்த வழக்கை பொறுத்தவரை மிகவும் நிதானமாகவே கத்திக்குத்து என்பது செய்யப்பட்டிருக்கிறது. இதைதான் நாம் ஆழ்ந்து பார்க்க வேண்டியதாக இருக்கிறது.

2008 ஆம் ஆண்டு பொன்னேரியில் ஏற்பட்ட சம்பவத்தை மையமாகக்கொண்டு Hospital Protection Act என்பது கொண்டு வரப்பட்டது. அதில், மருத்துவர் மீதோ, ஊழியர்கள் மீதோ, அல்லது மருத்துவமனை நிர்வாகத்தின் பொருட்களின் மீதோ ஏதேனும் தாக்குதல்கள் நடத்தப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குகள் பாயும். ஆனால், இதுக்குறித்தான விழிப்புணர்வு யாருக்குமே இல்லை. இனி அதை அதிகப்படுத்த வேண்டுமென்றே நான் நினைக்கிறேன்”

மருத்துவர் சாந்தி
சென்னை: “அரசு நிதி உதவியை பெற்றுத் தருகிறேன்” எனக்கூறி பிறந்து 45 நாட்களே ஆன குழந்தை கடத்தல்!

கேள்வி : சட்டம் உள்ளது என்று தெரிந்தாலும், இந்த விஷயத்தில் உணர்வுப்பூர்வமாக விக்னேஷ் வைக்கும் கோபம் நிறைந்த குற்றச்சாட்டுகளில் ஏதேனும் நியாயம் இருக்கிறதா?

பதில்: “விக்னேஷின் கோபத்தில் கொஞ்சம் கூட நியாயம் இல்லை. பிரேமா (விக்னேஷின் தாய்) புற்றுநோயில் நான்கு கட்டத்தை அடைந்துவிட்டார். கிண்டி மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பாக பல தனியார் மருத்துவமனைகளில் அவர்கள் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள். ஒரே மருத்துவமனையில் நிலையான சீரான நீடித்த சிகிச்சையை இவர்கள் பெறவில்லை. அப்படியிருக்கையில் இந்த மருத்துவமனையின் மருத்துவர் சிகிச்சை தராததால்தான் பிரேமா மோசமான நிலையில் உள்ளாரென கூறி, அதற்காக அந்த மருத்துவரை கத்தியால் குத்துவதில் எந்த நியாயமும் இல்லை”

மருத்துவர் சாந்தி
"அவர்களுக்கு உயிர் என்றால்... எங்களுக்கு இல்லையா? அந்த ஊசிதான்.."- விக்னேஷின் உறவினர்கள் சொல்வதென்ன?

கேள்வி : ஆனால் விக்னேஷ், ‘நன்றாகதான் என் தாயை மருத்துவமனையில் அனுமதித்தோம்... இப்போது அம்மாவின் நலம் குன்றியதற்கு மருத்துவர்தான் காரணம்’ என்ற குற்றச்சாட்டினை முன்வைக்கிறாரே?

பதில்: “இந்த இடத்தை நாம் மிகவும் ஆழ்ந்து பார்க்கவேண்டும். எந்த விதமான நோயின் தன்மையையும் புரிந்துக்கொள்ளாமலும், இதையே எல்லா ஊடகங்களிலும் ஒளிப்பரப்பி கொண்டிருக்கிறார்கள். இவையாவும் நவீன அறிவியல் மருத்துவத்தின் மீது ஒரு கோபத்தை மக்களுக்கு உண்டாக்கும். இங்கு முன்வைக்கப்படுவது, மருத்துவரின் செயல்பாடுகளும், சிகிச்சைமுறையும்தான். அது தவறான முன்உதாரணம். இங்கு நாம் நோயின் தீவிரத்தையே அறியவேண்டும். நான்காம் கட்ட புற்றுநோயாளியின் நிலைக்கு இறுதியில் இவர்கள் பார்த்த மருத்துவரை காரணம் சொல்வதோ அதற்காக அவரை கத்தியால் குத்துவதோ ஏற்புடையதல்ல”

கேள்வி : நோயாளியை முழுவதுமாக குணப்படுத்த வேண்டும் என்பதுதானே மருத்துவரின் நோக்கம்?

பதில்: “மருத்துவர்களால் முழுமையாக எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியாது. அவர்களால் முடிந்த அளவு முயற்சியை அளிக்கிறார்கள். ஒவ்வொரு நோய்களுக்கும் ஏற்றவாறு கிசிச்சை முறை என்னவென்று ஏற்கெனவே ஆய்வுகள் நடத்தி கொடுக்கப்பட்டுள்ளது. அதைதான் மருத்துவர்கள் செய்கிறார்கள். புற்றுநோய் நான்காம் கட்டத்தை அடைந்த நோயாளிக்கென சிகிச்சைகள் இன்னும் முழுமையடைந்து நம்மிடம் வரவில்லை. இருந்தபோதிலும் மருத்துவர் தன்னாலான எல்லா முயற்சிகளையும் செய்துகொண்டே இருந்திருப்பார்”

கேள்வி : இந்த சம்பவத்தில் மருத்துவர் செயல்பட்ட விதம் குறித்து கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. மன அழுத்தம், பணி அழுத்தத்தை தாண்டி மருத்துவர்களும் தங்களின் எல்லைகளை மீறி விடுகிறார்களா?

பதில்: “நிச்சயம் மருத்துவர்கள் நோயாளிகளை அடிப்பதற்கான வாய்ப்புகள் கிடையாது. மருத்துவர் சொல்லும் விதம் என்பது மாறுபடுகிறது என்றால் அவர்களுக்கு தேவையான communication skill கொடுக்கப்பட வேண்டும்.

நோயாளிகளை தனி அறையில் சந்திப்பது போன்றெல்லாம் இருப்பது நோயாளிகளின் privacy ஆக இருந்தாலும், ஒரு பிரச்னை நடந்தால் உண்மையில் யார் மீது தவறு என்று கூட தெரியாமல் போய்விடுகிறது.

மருத்துவர் சாந்தி
“பேட்டிங் ஆலோசகராக சச்சின் டெண்டுல்கரை நியமித்தால் பயனடையலாம்” - முன்னாள் வீரர் சொன்ன யோசனை..!

மருத்துவர்களிடம் ஒரே கேள்வியை சில நோயாளிகள் மீண்டும் மீண்டும் கேட்பதால் சில நேரத்தில் அவர்கள் குரலை உயர்த்தி பேசுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதற்காக, கத்தியை எடுத்து குத்தினால் தீர்வு வந்துவிடுமா?

இந்த சம்பவத்தில் மருத்துவர் சரியாக நோயாளியை கையாளவில்லை என்று கோபம் இருக்கும்பட்சத்தில் எந்த இடத்திலும் அவர் புகார் அளிக்கவில்லை. ஒருவரை கொல்லும் அளவிற்கு கோபம் இருந்தால் நேரடையாக கூறியிருக்கலாமே.. நடவடிக்கை எடுக்க கூறியிருக்கலாம். எதையுமே சொல்லாமல், இப்படி செய்வது ஏற்படையது அல்ல” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com