கருமத்தம்பட்டியில் நடைபெற்ற ஒயிலாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோவை மாவட்ட ஆட்சியர், பம்பை இசைத்து ஒயிலாட்டம் ஆடி மகிழ்ந்தார்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் நோக்கில் ஒயிலாட்ட நிகழ்ச்சி அரங்கேற்றம் செய்யப்பட்டது. இதில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், சூலூர் சட்ட மன்ற உறுப்பினர் கந்தசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.
இதையடுத்து ஒயிலாட்ட பாடல்களுக்கு சிறுவர் சிறுமியர் மற்றும் பெண்கள் நடனமாடினர். நடனத்தை ரசித்த ஆட்சியர் சமீரன் ஒயிலாட்டம் ஆடும் இடத்திற்கு வந்து பம்பை அடித்துக் கொண்டிருந்தவரிடம் பம்பையை வாங்கி அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பின்னர் நடனக் கலைஞர்களுடன் இணைந்து ஒயிலாட்டம் ஆடினார். இசைக்கு ஏற்ப ஆட்சியர் நடனமாடியது அங்கிருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.