தமிழ்நாடு முழுவதும் பட்டாசுகள் பல வெடித்து பலரும் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடியது ஒருபக்கமென்றால், இன்னொருபக்கம் சென்னையில் ஜவுளி விற்பனையும் களை கட்டியுள்ளது. தீபாவளி என்றாலே புத்தாடைகள் முக்கிய அங்கம் வகிக்கும் என்பதால் புதிய ரக ஆடைகள் சந்தைக்கு வருவதுண்டு. அந்த வகையில் இந்த ஆண்டும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் விதவிதமான ஆடைகள் விற்பனைக்கு வந்து மக்களின் கவனத்தை ஈர்த்தன.
சென்னையில் இரண்டு அடுக்குகளுக்கு மேலான கட்டடங்கள் கொண்ட 4500 துணிக்கடைகள் உள்ளதாகவும், இந்த ஆண்டு பட்டு புடவைகள் பெரிய அளவில் விற்பனை ஆனதாகவும் ஜவுளி உற்பத்தியாளார்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னை நகரில் உள்ள பெரிய துணிக்கடைகளில் மட்டும் தீபாவளி பண்டிகையை ஒட்டி, ஒரு மாதத்தில் 950 கோடி ரூபாய்க்கு ஜவுளி விற்பனை நடைப்பெற்றுள்ளதாக ஜவுளி விற்பனை சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு 900 கோடி ரூபாய்க்கு விற்பனை நடைப்பெற்ற நிலையில் இந்த ஆண்டு அதைவிட அதிகமாக 50 கோடி ரூபாய் அதிகமாக விற்பனையானதாக கூறியுள்ளனர்.