தமிழ்நாட்டில் பெண்கள் மேம்பாட்டிற்காக உள்ளூர் அரசு பேருந்துகளில் இலவச பயணம் செய்யும் வசதியை திமுக அரசு பொறுப்பேற்றவுடன் அறிவித்தது. இந்தத் திட்டத்தின் பலன் எந்த அளவுக்கு பெண்களை சென்று அடைந்திருக்கிறது என்பதனை ஆய்வு செய்யும் வகையில் நாகப்பட்டினம், மதுரை, திருப்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலும், கூடுதலாக சென்னையிலும் தமிழ்நாடு திட்டக்குழு சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில் நாகப்பட்டினத்தில் 416 பெண்களிடமும், மதுரையில் 422 பெண்களிடமும், திருப்பூரில் 437 பெண்களிடமும் தகவல் பெறப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதன் அறிக்கை முதலமைச்சரிடம் சமீபத்தில் சமர்பிக்கப்பட்டது. அந்த ஆய்வு, வெவ்வேறு வகையான பணிகளுக்கு செல்லும் பெண்களிடம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் நாகப்பட்டினம் - மதுரை - திருப்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வு முடிவில் தெரியவந்தவை:
இவ்வாறு ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.