திமுக கட்சியின் உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் இன்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுகவின் பொதுச்செயலாளர், பொருளாளர், முதன்மைச் செயலாளர்,துணை பொதுச்செயலாளர்கள், மற்றும் உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் என பலர் கலந்துகொண்டனர்..
திமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தற்போது நடைபெற்ற உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்தில் மொத்தம் 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தீர்மானம் 1 : மகளிருக்குக் கட்டணமில்லா விடியல் பேருந்து பயணம் மகளிருக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் - புதுமைப் பெண் - தமிழ்ப் புதல்வன் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு ’தமிழ்நாட்டை மேம்படுத்தி வரும் முதலமைச்சருக்கு பாராட்டு’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் 2 : இந்தி மாத வாரம் என விழா எடுப்பது, நாடு முழுவதும் - வலியுறுத்தப்பட்டு வரும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை மேற்கொள்ளாமல் காலந்தாழ்த்துவது போன்றவற்றை முன்னிருந்தி ’ஒன்றிய அரசுக்கு எதிராக தீர்மானம்’ நிறைவேற்றப்பட்டது.
மேலும், ’மீனவர்கள் நலன்களை காப்பீர்’ , மணிப்பூர் தீயை அணைப்பீர் , நிதி பகிர்வு தொடர்பாக தெரிவித்து ’நிதி உரிமையை நிலை நிறுத்துக’, ’சட்டமன்ற தேர்தலுக்கு தயாராவோ’ என்கிற தலைப்புகளில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.