”இன்னும் அதேநிலை இருக்கு” - தேர்தல் அரசியலில் திமுகவின் 75 ஆண்டுகால பயணம் - சாதனைகள், சவால்கள் என்ன?

சமூக நீதி என்ற கொள்கையுடன் தேர்தல் அரசியலில் 75 ஆண்டுகாலமாக களமாடி வேரூன்றி நிற்கும் திமுகஅதன் பவளவிழாவை கொண்டாடுகிறது. அது குறித்து நேர்படப் பேசு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் முன்வைத்த கருத்துகளை விரிவாக பார்க்கலாம்...
திமுக 75 ஆண்டுகளில் செய்த சாதனை
திமுக 75 ஆண்டுகளில் செய்த சாதனைpt desk
Published on

சமூக நீதி என்ற கொள்கையுடன் தேர்தல் அரசியலில் 75 ஆண்டுகாலமாக களமாடி வேரூன்றி நிற்கும் திமுகஅதன் பவளவிழாவை கொண்டாடுகிறது. அது குறித்து நேர்படப் பேசு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் முன்வைத்த கருத்துகளை விரிவாக பார்க்கலாம்...

ஆழி செந்தில்நாதன் (பதிப்பாளர்)

”திமுக தொடங்கிய காலத்தில் என்ன சவால்கள் இருந்ததோ அந்த சவால் இந்தியாவில் இன்னும் போகவில்லை. மூன்று தலைமுறைகளாக இந்த சவால்களை தாக்குப்பிடித்து இன்னமும் அதே திசையில் பயணிக்கிறது என்பது ஒரு அரசியல் கட்சிக்கு சுலபமாக விசயம் இல்லை. கட்சி தொடங்கும்போது என்ன மாதிரியான சிக்கல் இருந்ததோ அது பல மடங்கு அதிகரித்திருக்கும் இந்த சூழலில் அதை முன்னொடுக்கும் கட்சியாக இன்றைக்கும் திமுக இருக்கிறது என்பது வரலாற்றில் முக்கியமான விசயம்” என்றார்.

திமுக 75 ஆண்டுகளில் செய்த சாதனை
“பெண் அமைச்சருக்கு அடக்கம், பணிவு வேண்டும்” - ஈவிகேஎஸ் இளங்கோவன் சர்ச்சை கருத்து.. வானதி காட்டம்!

பேராசிரியர் அருணன் (மார்க்சிஸ்ட்)

”திராவிட இயக்கத்தில் நேரடி தேர்தல் அரசியலில் இறங்குவது என்பத முக்கியமான பங்களிப்பு. பெரியார் இதை ஒரு சமூக பண்பாட்டு இயக்கமாகதான் நடத்த விரும்பினார். ஆனால், வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை என வந்த பிறகு நிலைமை மாறுகிறது. அப்பொழுதும் திராவிட இயக்கம், திராவிட கழகம் முன் வைக்கும் சமூக சீர்திருத்தம் உள்ளிட்டவைகளை பேசிக் கொண்டேதான் இருந்திருக்க முடியும். அதை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற நோகத்தோடு பேரறிஞர் அண்ணா, திமுக என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அதுவே வரலாற்றின் முக்கியமான தருணம்” என்றார்.

திமுக 75 ஆண்டுகளில் செய்த சாதனை
மோடியின் 3வது ஆட்சி| முதல் 100 நாட்களின் சாதனைகளை பட்டியலிட்ட அமித்ஷா.. விமர்சித்த காங்கிரஸ்!

தியாகு (தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்)

”இன்றைக்கு நாடு இருக்கக் கூடிய சூழலில், ஒரு பாசிச பேராபத்தில் இருந்து தமிழ்நாட்டை காப்பதில் திமுகவின் பங்கு முக்கியம். எங்களுக்கு சுய நிர்ணய உரிமை வேண்டும் என்று மாநிலங்கள் அவையில் அண்ணா பேசினார். போராட்ட அடிப்படையிலான அரசியலில் திமுக வளர்ந்தது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்து அண்ணா முதல்வரான பிறகு, சுயமரியாதை திருமணங்களை சட்டப்பூர்வமாக்கியது. தமிழ்நாடு என்ற பெயர் மாற்ற தீர்மானம் கொண்டுவந்தது. உள்ளிட்ட பலவற்றை சாதனையாக சொல்லலாம்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com