”பொன்முடிக்கு வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு இறுதித் தீர்ப்பு அல்ல. உச்ச நீதிமன்றத்தில் இன்னும் நமக்கான ஒரு வாய்ப்பு இருக்கிறது. எனவே இதுதான் இறுதி என நினைத்துக் கொண்டு இதை பின்னடைவு என கருதவேண்டிய அவசியம் நமக்கில்லை. ஏற்கெனவே நான் சொன்னதைப் போல கீழமை நீதிமன்றம் அவரை விடுவித்திருந்தது. இப்போது நடுவிலே இருக்கிற ஒரு நீதிமன்றம் அந்த விடுதலையை ரத்து செய்திருக்கிறது.
ஆனால் அதற்கு மேலே இருக்கிற உச்ச நீதிமன்றம் அவரை விடுதலை செய்யும். எனவே இதனால் பின்னடைவா என்றால், ஒரு சின்ன நெருடல் நான் மறுக்கவில்லை. உச்ச நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு வந்த பின்புதான் நாம் இதைப்பற்றி கவலைப்பட வேண்டும். விமர்சிக்க வேண்டும். ஏனெற்றால் இந்த வழக்கினுடைய மெரிட் என்பதில் எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கு.
இரண்டு முக்கியமான கருத்துகளில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. நீதியரசர் அதை பார்க்கத் தவறி இருக்கிறாரோ என்று. நாங்கள் அதை உச்ச நீதிமன்றத்தில் நிச்சயமாக எடுத்துவைத்து வெற்றி பெறுவோம். எனவே இதனால் அவருக்கு பின்னடைவா, இவருக்கு பின்னடைவா என்பதல்ல இங்கு கேள்வி. இது நெருடல்தான். பின்னடைவு இல்லை என்பதுதான் என்னுடைய கருத்து” என்கிறார் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்.