சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் ஆதரவு, திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் பேரவையில் வலியுறுத்தி உள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பினை ரகசிய வாக்கெடுப்பு முறையில் நடத்த வேண்டும் என்று ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் சபாநாயகர் தனபாலிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில், இன்று சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் தொடங்கியதும் ரகசிய வாக்கெடுப்பு கோரிய ஓபிஎஸ் அணியினருக்கு ஆதரவாக திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உறுப்பினர்கள் கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து பேசிய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், ரகசிய வாக்கெடுப்பு மட்டுமே உண்மையான ஜனநாயகத்துக்கு வழிவகுக்கும் என்று தெரிவித்தார்.