டெண்டர் முறைகேடு வழக்கு: திமுகவின் ஆர்.எஸ். பாரதி கூடுதல் மனுத் தாக்கல்

டெண்டர் முறைகேடு வழக்கு: திமுகவின் ஆர்.எஸ். பாரதி கூடுதல் மனுத் தாக்கல்
டெண்டர் முறைகேடு வழக்கு: திமுகவின் ஆர்.எஸ். பாரதி கூடுதல் மனுத் தாக்கல்
Published on

சாலை ஒப்பந்தங்கள், திட்டங்களை தனது நெருங்கிய உறவினர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வழங்கியது உலக வங்கி வழிகாட்டுதல்களுக்கு முற்றிலும் எதிரானது என்று டெண்டர் முறைகேடு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் திமுகவின் ஆர்.எஸ். பாரதி கூடுதல் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

ஆர்.எஸ். பாரதி தாக்கல் செய்துள்ள கூடுதல் மனுவில் சாலை திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் எல்லாம் குறிப்பிட்ட 2 நிறுவனங்களுக்கு மட்டுமே  கொடுக்கப்பட்டது எனவும் அவை எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான நிறுவனங்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. அனைத்து ஆவணங்களை சரிபார்த்து தான் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதாக ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார். எனவே சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான எடப்பாடி பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என கோரியுள்ளார்.

மேலும், முதலமைச்சர் பதவியை பயன்படுத்தி தனக்கு எதிரான விசாரணையை தாமதப்படுத்தவும் அதனை தடம்புரளச் செய்யவும் வேண்டுமென்றே  மேற்கொள்ளப்பட்ட முயற்சி தான் மேல்முறையீட்டு வழக்கு என்பதால் அதனை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் ஆர்.எஸ். பாரதி கோரியுள்ளார். இந்த வழக்கு நாளை உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com