கூட்டணி முடிவை உறுதி செய்வாரா ஸ்டாலின் ?

கூட்டணி முடிவை உறுதி செய்வாரா ஸ்டாலின் ?
கூட்டணி முடிவை உறுதி செய்வாரா ஸ்டாலின் ?
Published on

ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பாக டெல்லியில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலையொட்டி தேசிய, மாநில கட்சிகள் இடையே கூட்டணி குறித்து பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில் பாரதிய ஜனதா கட்சியை தேர்தலில் தோற்கடி‌க்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி வருகிறார். இதற்கு பாஜகவுக்கு எதிராக மாபெரும் கூட்டணி அமை‌க்கும் முயற்சியில்‌ எதிர்க்கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளது. மேலும் ஆந்திர மாநில முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு பாஜகவுக்கு எதிரான கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.


இது தொடர்பாக ராகுல் காந்தியை சந்தித்த அவர் இந்தியாவை பாதுகாக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி மற்றும் முன்னாள் பிரதமர் தேவ கவுடாவை சந்தித்து பேசினார். பின் திமுக தலைவர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் வரும் திங்கட்கிழமை காங்கிரஸ், தெலுங்குதேசம், இடதுசாரி கட்சிகள், திரிணாமூல் காங்கி‌ரஸ், தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் திமுக சார்பில் அதன் தலைவர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாகவும், அதற்காக வரும் ஞாயிற்றுக்கிழமை காலை அவர் டெல்லிக்கு செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும்  டெல்லி செல்லும் திமுக தலைவர் ஸ்டாலின், சோனியா காந்தியை சந்திக்க உள்ளதாகவும், ‌இச்சந்திப்பின்போது கூட்டணி குறித்து பேச உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com