“அமலாக்கத்துறை அத்துமீறல்களை எதிர்க்கத் தவறிய ராமதாஸுக்கு...” ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்

அமலாக்கத்துறையின் அத்துமீறல்களை எதிர்க்கத் தவறிய ராமதாசுக்கு திமுகவை விமர்சிக்க தகுதியில்லை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சாடியுள்ளார்
RS.Bharathi  Ramadoss
RS.Bharathi Ramadosspt desk
Published on

செந்தில் பாலாஜியை முதலமைச்சர் தியாகி எனக் கூறியதை விமர்சித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள ஆர்.எஸ்.பாரதி, செந்தில் பாலாஜி மீதுள்ள வழக்குகளையும் அதன் பின் உள்ள அரசியலையும் புரிந்துகொள்ளாமல் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

 senthil balaji ED
senthil balaji ED file

செந்தில் பாலாஜி சிறையில் இருக்கும்போது நீங்கள் ஏன் பாஜகவில் சேரக்கூடாது என அமலாக்கத்துறையினர் கேட்டதாக வழக்கறிஞர் கூறியதாக ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். திமுகவிற்கு எதிராக செந்தில் பாலாஜியை களமாட வைக்க நடந்த முயற்சிக்கு அவர் அடிபணியவில்லை என்றும் இதுதான் அவரது தியாகம் என்றும் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

RS.Bharathi  Ramadoss
இபிஎஸ் மீது செல்போனை எறிந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன் - முன்னாள் எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத்

மருத்துவக் கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி வழங்கிய விவகாரத்தில் அமலாக்கத்துறை பிடியிலிருந்து தப்பிக்கத்தான் அன்புமணி பாஜகவிடம் தஞ்சமடைந்துள்ளதாக ஆர்எஸ் பாரதி குறிப்பிட்டுள்ளார். ராமதாஸ், தான் செய்த பாவங்களை கழுவிவிட்டு திமுகவை விமர்சிக்கட்டும் என்றும் அறிக்கையில் ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டுள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com