காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் 22 ஆம் தேதி திமுக சார்பில் அனைத்து கட்சி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் வீட்டுக்காவலில் உள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என குறிப்பிட்டுள்ளார். மேலும், “டெல்லி ஜந்தர் மந்தரில் 22 ஆம் தேதி காலை 11 மணியளவில் எம்பிக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபடுவர். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைத்துக்கட்சி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பர். அடக்குமுறைகள், ஊரடங்கு உத்தரவு மூலம் காஷ்மீரை தனிமைப்படுத்தி வைத்திருக்கிறது பாஜக அரசு. தொலைத்தொடர்புகளை துண்டித்து ஜம்மு காஷ்மீரில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்களை வீட்டுக்காவலில் வைத்து அடிப்படை உரிமைகளை பாஜக அரசு பறித்துள்ளது” என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.