புதியதலைமுறையின் நேர்படப்பேசு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த நடிகை கஸ்தூரி பிராமணர்கள் ஒடுக்கப்படுகின்றனரா என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில், பிராமணர் அல்லாதோர் பதவிக்கு வந்தால் லஞ்சம் வாங்குவர் என்று கூறியிருந்த நிலையில், இவரின் கூற்றுக்கு திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா தனது கண்டனத்தை கூறியுள்ளார்.
ஒடுக்கப்பட்டோரை குற்றப்பரம்பரையாக சித்தரிப்பதா? பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்டவர்களை மிக மோசமாக சித்தரிக்க முயன்றுள்ளார் கஸ்தூரி என்று தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.