ஆளுநர் உரையை புறக்கணித்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தமிழகத்தில் 15-ஆவது சட்டப்பேரவையின் எட்டாவது கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது உரையை தொடங்கினார். ‘அனைவருக்கும் காலை வணக்கம். புத்தாண்டு நல்வாழ்த்துகள்’ என தமிழில் கூறி ஆளுநர் உரையை தொடங்கினார். ஆளுநர் பேசிக்கொண்டிருக்கும்போது, ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதனையடுத்து சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பேச அனுமதிக்காததால் திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்ததாக கூறினார். தமிழக ஆளுநர் உரையால் நாட்டில் எந்த தாக்கமும் ஏற்படப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.