”நட்பு தொடரும்” “நகைச்சுவையாகவே பேசினேன்; பகைச்சுவையாக அல்ல” - ரஜினி பதிலும் துரைமுருகன் விளக்கமும்

சென்னை கலைவாணர் அரங்கில் நடைப்பெற்ற புத்தக வெளியீட்டு விழாவில், திமுக அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, அதன் முதல் பிரதியை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார்.
துரைமுருகன் - ரஜினிகாந்த்
துரைமுருகன் - ரஜினிகாந்த்pt
Published on

சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி நடைப்பெற்ற புத்தக வெளியீட்டு விழாவில், திமுக அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, அதன் முதல் பிரதியை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார்.

அப்போழுது, விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் ரஜினி காந்த், கலைஞர் எதிர்கொண்ட அரசியல் சவால்கள் குறித்து பெருமையாக பேசினார். மேலும் உடன் அரசியல் பேசும்போது ஜாக்கிரதையாக பேசவேண்டும் என்றும் , பேசியிருந்தார்... மேலும் அமைச்சர் துரைமுருகனை குறிக்கும் விதமாக, “பழைய ஸ்டூடண்ட்” என்ற வார்த்தை ஒன்றையும் உதிர்த்திருந்தார்.

சென்னை: அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ புத்தகத்தை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; புத்தகத்தை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.
சென்னை: அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ புத்தகத்தை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; புத்தகத்தை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.

ரஜினியின் இந்த பேச்சு விவாதமான நிலையில், ரஜினிக்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ”ரஜினிகாந்தை பல்லு போன நடிகர்” என விமர்ச்சித்திருந்தார்.

துரைமுருகன் - ரஜினிகாந்த்
”வயசான நடிகர்களால் இளைஞர்களுக்கு வாய்ப்பில்லாம போகிறதா?” - ரஜினிக்கு துரைமுருகன் ThugLife பதில்!

இதற்கு ரஜினிகாந்த், செய்தியாளார்களிடம் பேசுகையில், ”துரைமுருகன் பேசியதில் வருத்தமில்லை... துரைமுருகனுடனான நட்பு என்றென்றும் தொடரும்” என பேசியிருந்தார்.

இதற்கும் பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், ”ரஜினியைப்பற்றி நகைச்சுவையாகவே பேசினேனே தவிர பகைச்சுவையாக அல்ல... ” என்று பதிலளித்தார்.

இந்த விவாதத்திற்கு இரு தரப்பினரும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com