“அன்பழகனுக்குச் சிகிச்சை பலன் தராத நிலையே உள்ளது” - மு.க.ஸ்டாலின்

“அன்பழகனுக்குச் சிகிச்சை பலன் தராத நிலையே உள்ளது” - மு.க.ஸ்டாலின்
“அன்பழகனுக்குச் சிகிச்சை பலன் தராத நிலையே உள்ளது”  - மு.க.ஸ்டாலின்
Published on

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனுக்கு அளிக்கப்படும் தீவிர சிகிச்சை பலன் அளிக்காத நிலையே உள்ளதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுகவின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் வயது முதிர்வு காரணமாக வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இதைத்தொடர்ந்து சளி மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 25ஆம் தேதி அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அவ்வப்போது நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்று சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு சென்ற ஸ்டாலின், அன்பழகனின் உடல்நிலை குறித்து நேரில் கேட்டறிந்தார். திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு மற்றும் முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஸ்டாலினுடன் சென்று அன்பழகனின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகிறார்கள். வயது முதிர்வின் காரணமாக வழங்கப்படும் சிகிச்சைகள் பயனளிக்க முடியாத அளவில் இருக்கிறது. இருந்தும் தொடர் சிகிச்சையில், தீவிர கண்காணிப்பில் அன்பழகன் இருந்து வருகிறார்” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com