கண்ணீர்க் கடலில் கருணாநிதியின் குடும்பம்: தொண்டர்கள் “வென்றுவா” முழக்கம்

கண்ணீர்க் கடலில் கருணாநிதியின் குடும்பம்: தொண்டர்கள் “வென்றுவா” முழக்கம்
கண்ணீர்க் கடலில் கருணாநிதியின் குடும்பம்: தொண்டர்கள் “வென்றுவா” முழக்கம்
Published on

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவரது குடும்பத்தினர் கண்ணீர் சிந்தி கதறி அழுதனர்.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். ராஜாஜி ஹாலில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பிரதமர் மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 

கருணாநிதியின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கியது. ராஜாஜி ஹாலில் இருந்து புறப்பட்டு சிவானந்தா சாலை, வாலாஜா சாலை வழியாக இறுதி ஊர்வலம் அண்ணா சதுக்கம் சென்றது. அவரது உடலை சுற்றி திமுக தொண்டர்கள் மற்றும் மக்கள் முழக்கங்களை எழுப்பினர். கண்ணீர்க் கடலில் கருணாநிதி, அண்ணா அருகே சென்று சேர்ந்தார். கருணாநிதியின் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் மரியாதை செய்த பின்னர், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அடக்கம் செய்யும் போது அரசு மரியாதையுடன், 21 குண்டுகள் சுடப்பட்டன. மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, தமிழரசன், கனிமொழி, செல்வி உள்ளிட்ட கருணாநிதியின் குடும்பத்தினர் கண்ணீர் விட்டு அழுதனர். ஸ்டாலின் அழுதக் காட்சி காண்போரை கலங்கச்செய்தது. 

இதற்கிடையே திமுக மற்றும் கருணாநிதியின் தொண்டர்கள், அவருக்கு புகழ் முழக்கம் செய்தனர். “எழுந்து வா தலைவா, சென்றுவா தலைவா, வென்றுவா தலைவா, புகழ் வாழ்க, டாக்டர் கலைஞர் வாழ்க” என்று கண்ணீருடன் முழக்கமிட்டனர். அவர்களது கண்ணீர் வெள்ளத்தில் மெரினாவே கலங்கியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com