“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
கோவை புலியகுளம் அருகே உள்ள அம்மன்குளம் பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட தானியங்கி குடிநீர் இயந்திர திறப்பு விழா நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்துகொண்டு இயந்திர மையத்தை ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார். இதைத்தொடர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்...
புதிதாக அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். அரசியல் ரீதியாக அனுபவம் உள்ளவர். சக உறுப்பினராக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மாநில முதல்வருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கோரிக்கை வைத்திருந்தேன். அதில், திராவிட மாடலின் அடிப்படை சமூக நீதி என்றால், அந்த சமூக நீதி சம நீதியாக இருக்க வேண்டும் என்று.
பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு துணை முதல்வர் பதவியோ, அல்லது முக்கிய இலாகாக்களின் பதவியோ வழங்கவில்லை. கட்சியில் இருக்கும் தலைவரின் மகனுக்கு வழங்கியுள்ளனர். திராவிட மாடல் வாரிசு அரசியலை மையப்படுத்தி தான் உள்ளது என்பதை மீண்டும் நிரூபிக்கிறது. திரும்பவும் நிரூபித்துள்ளார்கள். பட்டியலினத்தவருக்கு முக்கிய இலாகாக்கள் கொடுக்கவில்லை.
பாஜகவில் உண்மையான ஜனநாயகம் உள்ளது. கர்நாடகா தேர்தலில் கருத்துக் கணிப்பை அல்ல மக்களை நம்புகிறோம். மக்கள் ஆதரவு பாஜகவிற்கு உள்ளது. கருத்துக் கணிப்பை வைத்து நேரத்தை போக்கிக் கொள்ளலாம்.கனிமவள கொள்ளை தினமும் இரவு நேரத்தில் நடைபெறுகிறது. நூற்றுக்கணக்கான லாரிகளில் கனிம வளம் கடத்தப்படுகிறது. ஈராண்டு ஆட்சி சாதனை அல்ல வேதனை தான்.
கவர்னரின் செயல்பாடு முழுக்க முழுக்க அரசியலமைப்புச் சட்டம் சார்ந்தது. பாஜக மாநில தலைவர் மீது சட்டரீதியான நடவடிக்கை என்கிறார்கள். குடும்பமே சேர்ந்து நோட்டீஸ் அனுப்புகிறார்கள். திமுக அரசு இருக்கும் வரை இந்து மத நம்பிக்கையை கொச்சைப்படுத்த அனுமதிக்கிறார்கள்.
போலீஸ் பாதுகாப்புடன் கேரளா ஸ்டோரி படம் ரிலீஸ் செய்தனர். ஆனால் மறைமுகமாக தியேட்டர்காரர்கள் மிரட்டப்பட்டனர்” என தெரிவித்தார்.