“காவல்துறையின் மிரட்டலுக்கு அதிமுக பயப்படாது” - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

“காவல்துறையின் மிரட்டலுக்கு அதிமுக பயப்படாது” - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
“காவல்துறையின் மிரட்டலுக்கு அதிமுக பயப்படாது” - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
Published on

அதிமுக ஆட்சியில் சாலைகள் போடுவதற்கு வழங்கப்பட்ட டெண்டர்கள் உட்பட பல்வேறு திட்டங்களை திமுக அரசு ரத்து செய்து இருக்கிறது எனவும் கையாலாகாத அரசாக திமுக அரசு இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டினார்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக்கூறி திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது. கோவை குனியமுத்தூர் பகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கருப்பு உடை அணிந்து கையில் பதாகைகளை ஏந்தியபடி கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய எஸ்.பி.வேலுமணி “ஆட்சியில் அமர்ந்ததும் பல்வேறு திட்டங்களை திமுக அரசு அறிவித்தார்கள். ஆனால், எதையும் செயல்படுத்தவில்லை. நீட் தேர்வு ரத்து, குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் கொடுப்பது, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, மேகதாதுவில் அணை கட்டுவதை தடுப்பது போன்ற எதையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை.

எதைப் பற்றியும் கவலை படாத அரசாக இந்த அரசு இருக்கின்றது. கொரோனா தொற்று தடுப்பில் கவனம் செலுத்தவில்லை. திமுக அரசு வந்தபின் ஒவ்வொரு ஊரிலும் 50 முதல் 60 பேர் இறந்திருக்கின்றனர். டெல்லியில் பிரதமரை சந்தித்து தடுப்பூசி வழங்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான இபிஎஸ் கோரிக்கை வைத்துள்ளார். இதுபோன்ற செயல்களை செய்யாமல் விட்டு விட்டு அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுவது, காவல்துறை மூலம் மிரட்டுவது போன்ற செயல்களில் திமுக அரசு ஈடுபடுகின்றது. காவல் துறையினர் நடுநிலையோடு செயல்பட வேண்டும். காவல்துறை மிரட்டலுக்கு அதிமுகவினர் பயப்பட மாட்டோம்.

நாங்கள் கொண்டுவந்த பல திட்டங்களை திமுக அரசு ரத்து செய்து இருக்கிறது. கையாலாகாத அரசாக இருக்கின்றது. கொரோனா இறப்பை குறைத்து காட்டுகிறது. அதிமுக ஆட்சியில் மோசமாக இருந்த ஊரக சாலைகளை புதுப்பிக்க போடப்பட்டு இருந்த சாலை டெண்டர்கள் ரத்து செய்து இருப்பதை கண்டிக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com