“கவுன்சிலர்கள் தவறு செய்தால் பதவிப்பறிப்பு...”- திமுக மாவட்ட செயலாளர்களின் கூட்டத்தில் நடந்தது என்ன?

இன்று காலை 10.30 மணி அளவில், சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் மாவட்ட செயலாளர்களின் கூட்டமானது முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைப்பெற்றது.
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்முகநூல்
Published on

2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு என முதலமைச்சர் ஸ்டாலின் திமுக மாவட்ட செயலாளர்களின் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணி அளவில், சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் தொடங்கி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், கே என் நேரு, சேகர் பாபு உள்ளிட்ட திமுக தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், திமுக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும், இக்கூட்டத்தில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் எழுதிய “40/40 தென் திசையின் தீர்ப்பு” என்ற புத்தகமும் வெளியிடப்பட்டது.

இக்கூட்டத்தில் அமைப்பு ரீதியாக மாவட்டங்களை அதிகரித்து, புதிய நிர்வாகிகளை நியமிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இத்துடன், ‘முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உருவம் பொறித்த நாணயம் வெளியிடும், மத்திய அரசுக்கு நன்றி’ தெரிவித்து திமுக தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

3 தீர்மானங்கள்

அதே வேளையில்

  • மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கான நிதி பகிர்வில் வஞ்சனை காட்டும் ஒன்றிய அரசுக்கு கண்டனம்,

  • நாற்பதுக்கு நாற்பது வென்ற திமுக தலைவருக்கு வாழ்த்துக்கள்,

  • தி.மு.கழகத்தின் பவள விழா ஆண்டில் சென்னையில் எழுச்சிமிகுந்த முப்பெரும் விழா நடத்துவது

உள்ளிட்ட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”நாடாளுமன்ற தேர்தலில் 40 க்கு 40 வெற்றிக்கு உழைத்த நிர்வாகிகள் மற்றும் வாக்களர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளிலும் வெற்றிப்பெறுவதையே நமது இலக்காக வைத்திருக்கவேண்டும்.

திமுக நிறைய நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கி இருக்கிறது. அவற்றை வாக்குகளாக மாற்றக்கூடிய களப்பணியை மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் மேற்கொள்ள வேண்டும்.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
திருவள்ளூர்: திமுக பிரமுகர் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கு - 4 பேர் ஆந்திராவில் கைது

ஏற்கெனவே கடந்த 10 தேர்தல்களில் தொடர்ந்து நாம் வெற்றி அடைந்திருக்கிறோம். சுணக்கமின்றி தொடர்ந்து செயல்பட்டால் அடுத்த முறையும் திமுக ஆட்சிதான். எனவே, ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதை மாவட்ட செயலாளர்கள் கவனத்தில் வைத்து செயல்பட வேண்டும். சில மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளின் மீது புகார்கள் வந்திருக்கின்றன. அனைத்து புகார்கள் குறித்தும் தலைமை விசாரணை மேற்கொள்ளும்.

செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் கட்சியின் அனைத்து அமைப்புகளிலும் பொது உறுப்பினர் கூட்டம் நடத்தப்பட வேண்டும். ஒவ்வொருவரின் உழைப்பின் அடிப்படையிலுமே உயர்வு இருக்கும். மேலும், அனைத்து பூட் கமிட்டிகளும் செம்மைப்படுத்தப்பட வேண்டும். அனைத்து சார்பு அணிகளையும், நிர்வாகிகளையும் அணைத்து செல்ல வேண்டிய பொறுப்பு மாவட்ட செயலாளர்களுடையது.

மேலும், அமைச்சர்கள் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களுக்கு உதவி செய்து கொடுக்க வேண்டும். அடுத்தடுத்த நாட்களில் அமெரிக்காவில் இருந்தாலும் கட்சியையும், ஆட்சியையும் நான் கவனித்துக் கொண்டுதான் இருப்பேன்”

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
நெல்லை: லாரி மீது கார் மோதிய விபத்து - கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்த சோகம்

மேலும், கவுன்சிலர்கள் தவறு செய்தால் பதவிப்பறிப்பு உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்” என மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com