"அதிமுக அரசின் நலத்திட்டங்களை திமுக தொடர்ந்து கொச்சைபடுத்துகிறது" - அமைச்சர் கே.சி.வீரமணி

"அதிமுக அரசின் நலத்திட்டங்களை திமுக தொடர்ந்து கொச்சைபடுத்துகிறது" - அமைச்சர் கே.சி.வீரமணி
"அதிமுக அரசின் நலத்திட்டங்களை திமுக தொடர்ந்து கொச்சைபடுத்துகிறது" - அமைச்சர் கே.சி.வீரமணி
Published on

"எம்.ஜி.ஆர் கொண்டு வந்த சத்துணவு திட்டத்தையே கொச்சைபடுத்தியவர்கள் திமுகவினர். அவர்கள் கொச்சைபடுத்தாத திட்டம் ஏதேனும் உண்டா? குற்றம் சொல்வதையே வாடிக்கையாக கொண்டவர்கள் அவர்கள்" என வேலூரில் அமைச்சர் கே.சி.வீரமணி பேட்டியளித்தார்.


தமிழக அரசு அறிவித்த அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் திட்டத்தை வேலூர் மாவட்டத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.சி.வீரமணி பேசும்போது, "சத்துணவு திட்டத்தை எம்.ஜி.ஆர் கொண்டுவந்தபோது கூட இப்படி தான் கொச்சைபடுத்தி பேசினார்கள். கடந்த 45 ஆண்டுகளாக தொடர்ந்து சத்துணவு திட்டம் செயல்படுகிறது.

அதேபோல தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு சைக்கிள், லேப்டாப் வழங்குவது உள்ளிட்ட அனைத்தையும் திமுகவினர் கொச்சைப்படுத்தி பேசுகிறார்கள். அவர்கள் கொச்சைபடுத்தாத திட்டம் ஏதாவது உண்டா? அந்த வகையில்தான் தற்போது பொங்கல் பரிசாக ரூ.2,500 கொடுப்பதையும் கொச்சைபடுத்துகிறார்கள்.


கடந்த ஆண்டு 1000 ரூபாய் கொடுத்ததற்கும் நீதிமன்றம் சென்றார்கள். ஆக குற்றம் சொல்வதும் ஏதாவது ஏளனம் பேசுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்கள்" எனக் கூறினார். மேலும் இப்பொங்கல் பரிசு வரும் ஜனவரி 13ஆம் தேதி வரை வழங்கப்படும் என்றும் விடுபட்டவர்கள் பொங்கல் முடிந்த பிறகும் வாங்கிக்கொள்ளளாம் என்றும் அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com