தமிழகத்தில் திமுக கூட்டணி 160 முதல் 172 இடங்களுடன் ஆட்சி அமைக்கும் என்று சிவோட்டர்ஸ் - ஏபிபி சேனல் தனது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளது.
திமுக கூட்டணி 160-ல் இருந்து 172 இடங்கள் வரையிலும், அதிமுக கூட்டணி 58-ல் இருந்து 70 இடங்கள் வரையிலும், அமமுக கூட்டணி 0 முதல் 5 இடங்கள் வரையிலும் வசப்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சிவோட்டர்ஸ், ஏபிபி சேனல் இணைந்து நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகளின் விவரம்
தமிழகம் 234/234: (பெரும்பான்மைக்கு 118)
> திமுக கூட்டணி: 160 - 172
> அதிமுக கூட்டணி: 58 - 70
> அமமுக கூட்டணி: 0 - 4
> மநீம கூட்டணி: 0
> நாதக - 0
> பிற - 0
ரிபப்ளிக் சேனல், சி.என்.எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகளிலும் தமிழகத்தில் திமுக கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.