திருச்சி மாவட்டம் முக்கொம்பு அணையில் மதகுகள் உடைந்த பகுதிகளை எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
முக்கொம்பு அணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்து மதகுகள் உடைந்து, பாலத்தில் ஒரு பகுதி இடிந்தது. அங்கு சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முக்கொம்பு அணைப் பகுதிகளை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிகாரிகள் முன்கூட்டியே ஆய்வு செய்து முறையாக தண்ணீர் திறந்துவிட்டிருந்தால் மதகுகள் உடைந்திருக்காது என தெரிவித்தார். சீரமைக்கும் பணிகள் 40 சதவீதம் கூட நிறைவடையவில்லை என குற்றம்சாட்டிய ஸ்டாலின், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்றுச் சேரவில்லை என்றும் கூறினார். அனைத்து பணிகளிலும் முறைகேடுகள் நடப்பதாக குறிப்பிட்ட ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் முறைகேடுகள் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார். தமிழக அரசு செயல்படாமல் இருப்பதாகவும் ஸ்டாலின் விமர்சித்தார்.