“சிஏஏக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுங்கள்” - பேரவையில் திமுக கோரிக்கை, சபாநாயகர் நிராகரிப்பு

“சிஏஏக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுங்கள்” - பேரவையில் திமுக கோரிக்கை, சபாநாயகர் நிராகரிப்பு

“சிஏஏக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுங்கள்” - பேரவையில் திமுக கோரிக்கை, சபாநாயகர் நிராகரிப்பு
Published on

சிஏஏ-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நேரமில்லா நேரத்தின்போது, குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். சிஏஏ-க்கு எதிராக தமிழக பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். திமுக சார்பில் இதுதொடர்பாக ஏற்கெனவே மனு அளிக்கப்பட்டது என்றும் கூறினார்.

மேலும் பேசிய ஸ்டாலின், “டெல்லியைபோல தமிழகமும் போராட்ட களமாக மாறி வருகிறது. வண்ணாரப்பேட்டையில் தடியடி நடத்த தூண்டிவிட்டது யார் ? அமைதி போராட்டத்தில் தடியடி நடத்தியதால் வன்முறை களமாக மாறிவிட்டது. முதலமைச்சர் நேரில் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். நடப்பு கூட்டத்தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுதான் திமுகவின் நிலைப்பாடு. சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இதனையடுத்து பேசிய சபாநாயகர் தனபால், “சிஏஏவுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பில்லை” என்று கூறி திமுகவின் கோரிக்கையை நிராகரித்து விட்டார். வண்ணாரப்பேட்டை விவகாரம் குறித்து மட்டும் இன்று பேசலாம் என்ற சபாநாயகர், கடந்த கூட்டத்தொடரில் கொடுத்த மனுவை தற்போதைய கூட்டத்தொடரில் எடுக்க சட்டமன்ற விதியில் இடமில்லை என்றும் தெரிவித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com