‘தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 2,081 கோடி வாடகை பாக்கியை குறைக்க பேரமா?’ - ஸ்டாலின் கேள்வி

‘தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 2,081 கோடி வாடகை பாக்கியை குறைக்க பேரமா?’ - ஸ்டாலின் கேள்வி
‘தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 2,081 கோடி வாடகை பாக்கியை குறைக்க பேரமா?’ - ஸ்டாலின் கேள்வி
Published on

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 2,081 கோடி ரூபாய் வாடகை பாக்கியை குறைக்க பேரம் நடப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு கடந்த 1935 ம் ஆண்டு சுமார் 15 ஏக்கர் நிலம் குத்தகைக்கு வழங்கப்பட்டது. இந்த நிலத்தில் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டது. குத்தகை காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. கடந்த 1995 ஆம் ஆண்டு புதிய குத்தகை ஒப்பந்தம் தமிழக அரசுடன் ஏற்படுத்தப்பட்டது. அதன்படி 2015 ஆம் ஆண்டு வரை குத்தகை ஒப்பந்தம் ஏற்படுத்துவது என்றும் 2000 ஆவது ஆண்டுவரை மாதம் 50 ஆயிரம் குத்தகையும் 2000 ஆண்டுக்கு பிறகு சந்தைமதிப்பில் குத்தகையை மாற்றி அமைப்பது என இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளபட்டது. இதனிடையே, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் 2000 கோடி ரூபாய்க்கு மேல் வாடகை பாக்கி வைத்துள்ளதாக சிஏஜி அறிக்கை வெளியாகி இருந்தது. 

இந்நிலையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் வாடகை பாக்கி தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு ஒன்றினை முன் வைத்துள்ளார். அவரது ட்விட்டர் பக்கத்தில் , “தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2081 கோடி வாடகை பாக்கி வைத்துள்ளது என சிஏஜி அறிக்கை சுட்டிக்காட்டியும், அந்தப் பணத்தை வசூல் செய்யாமல், ரூ.250 கோடியாக குறைக்கும் 'பேரம்' நடப்பதாக செய்தி! அமைச்சரவை அப்படி முடிவு எடுத்திருந்தால், அதற்கான அரசாணை ஏதும் வெளியிடாமல் நிறுத்த வேண்டும்.

மக்கள் நலத் திட்டங்களுக்கு, நிதிப் பற்றாக்குறை எனும் நேரத்தில், இதுபோன்ற வாடகை பாக்கியை குறைக்கும் நடவடிக்கை யார் லாபத்திற்காக? 'கமிஷன், கரப்ஷன், கலெக்‌ஷன், பேரம்' - இதுதவிர அதிமுக ஆட்சிக்கு வேறேதுமே தெரியாதா?” என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com