’பாஜகவுக்கு ஒரு நீதி, பிற கட்சிக்கு ஒரு நீதியா?’ ஸ்டாலின் பேட்டி

’பாஜகவுக்கு ஒரு நீதி, பிற கட்சிக்கு ஒரு நீதியா?’ ஸ்டாலின் பேட்டி
’பாஜகவுக்கு ஒரு நீதி, பிற கட்சிக்கு ஒரு நீதியா?’ ஸ்டாலின் பேட்டி
Published on

’பாஜவுக்கு ஒரு நீதி, பிற கட்சிக்கு ஒரு நீதியா?’ என்று நக்கீரன் கோபாலை சந்தித்த பின்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

சென்னையில் இருந்து புனே செல்வதற்காக விமான நிலையத்துக்கு வந்த மூத்த பத்திரிகையாளரும், நக்கீரன் இதழின் ஆசிரியருமான கோபாலை காவல் துறையினர் இன்று காலை கைது செய்தனர். தமிழக ஆளுநர் மாளிகையில் இருந்து கொடுக்கப்பட்ட புகாரின்படி கோபால் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபாலை சிந்தாதிரிபேட்டை காவல் துணை ஆணையர் அலுவலகத்துக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். விசாரணைக் குப் பின்னர் பரிசோதனைக்காக திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். பரிசோதனைக்குப் பிறகு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார்.

இந்நிலையில் நக்கீரன் கோபால் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரை சந்திப்பதற் காக திருவல்லிக்கேணி மருத்துவமனைக்கு சென்றார். அவருடன் திமுக பொருளாளர் துரைமுருகன், சேகர் பாபு, பொன்முடி, ஆ.ராசா ஆகியோரும் சென்றனர்.  

சந்தித்த பின் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ‘நக்கீரன் கோபாலை கைது செய்தது கண்டிக்கத் தக்கது. உயர்நீதிமன்றம் பற்றி கடுமையாக பேசிய பாஜவை சேர்ந்த எச்.ராஜாவை கைது செய்யாதது ஏன்? பெண் பத்திரிகை யாளர் களை கொச்சைப்படுத்தி பேசிய எஸ்.வி.சேகர் கைது செய்யப்படவில்லை. பாஜகவுக்கு ஒரு நீதி, மற்ற கட்சிகளுக்கு ஒரு நீதி என இந்த அரசு செயல்படுகிறது. நக்கீரன் கோபால் கைது சர்வாதிகார நாட்டில் இருக்கிறோமோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும். இல்லை என்றால் பின் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக் கும்’ என்றார். 

பின்னர் அவர் நக்கீரன் கோபாலை சந்திக்க சென்று தர்ணாவில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட வைகோவை சந்தித்து பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com