முதியோருக்கான தபால் வாக்குகளுக்கு எதிர்ப்பு - திமுகவின் வழக்கு ஜன. 7-இல் விசாரணை

முதியோருக்கான தபால் வாக்குகளுக்கு எதிர்ப்பு - திமுகவின் வழக்கு ஜன. 7-இல் விசாரணை
முதியோருக்கான தபால் வாக்குகளுக்கு எதிர்ப்பு - திமுகவின் வழக்கு ஜன. 7-இல் விசாரணை
Published on

80 வயதுக்கு மேலான முதியோருக்கு தபால் வாக்கு அளிக்கும் முறைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கு ஜனவரி 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் விருப்பப்பட்டால் தபாலில் வாக்களிக்கலாம் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என திமுக தரப்பில் மனு கொடுக்கப்பட்டிருந்தது. அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்காததால் திமுக தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரந்தது.

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது ‘இதேபோன்று டிசம்பர் 3 இயக்கத்தின் தீபக் என்பவர் தொடர்ந்த வழக்கை நீதிபதி சத்தியநாராயணன் அமர்வு ஜனவரி 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர். அதேபோல் இந்த வழக்கையும் அதே தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என திமுக தரப்பு வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி கோரிக்கை வைத்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் திமுகவின் வழக்கை ஜனவரி 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர். இதனால் தீபக்கின் வழக்கும், திமுகவின் வழக்கும் ஒரே அமர்வில் ஜனவரி 7ஆம் தேதி பட்டியலிடப்படும் எனத் தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com