மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்புமனு தாக்கல் இன்னும் சற்று நேரத்தில் துவங்கவுள்ள நிலையில், ஒவ்வொரு கட்சியும் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்து வெளியிட்டு கொண்டுள்ளனர். அந்தவகையில் அதிமுக மக்களவை தேர்தலுக்கான தங்களின் வேட்பாளர் பட்டியலை இன்று காலை வெளியிட்டது.
தொடர்ந்து தற்போது திமுகவும் தங்களது வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள 543 லோக்சபா தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுவையில் உள்ள ஒரு தொகுதிக்கு தேர்தல் நடைபெறுகிறது.
அதில் தமிழ்நாடு புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில், I.N.D.I.A. கூட்டணித் தலைமையில் தி.மு.க தேர்தலை எதிர்கொள்கிறது. இந்தக் கூட்டணியில் தி.மு.க தலைமையில் காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் களம் காண்கின்றன.
இதில் தாங்கள் போட்டியிடும் 21 மக்களவை தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலையும், அவர்கள் போட்டியிடும் தொகுதியினையும் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று சில மணி நேரங்களுக்கு முன்னர் வெளியிட்டுள்ளார். அதன்படி,
வட சென்னை: கலாநிதி வீராசாமி
தென் சென்னை: சுமதி என்கிற தமிழச்சி தங்க பாண்டியன்
மத்திய சென்னை : தயாநிதி மாறன்
காஞ்சிபுரம் (தனி) : ஜி செல்வம்
ஸ்ரீபெரும்பதூர்: டி ஆர் பாலு
அரக்கோணம்: ஜெகத்ரட்சகன்
வேலூர்: கதிர் ஆனந்த்
தருமபுரி: ஆ மணி
திருவண்ணாமலை: சி என் அண்ணாதுரை
ஆரணி: எம் எஸ் தரணிவேந்தன்
கள்ளக்குறிச்சி: மலையரசன்
சேலம்: செல்வகணபதி
ஈரோடு: கே ஏ பிரகாஷ்
நீலகிரி :ஆ ராசா
கோவை: கணபதி ராஜ்குமார்
பொள்ளாச்சி: ஈஸ்வரசாமி
பெரம்பலூர்: அருண் நேரு
தஞ்சாவூர்: முரசொலி
தேனி: தங்க தமிழ்செல்வன்
தென்காசி: ராணி ஸ்ரீகுமார்
தூத்துக்குடி: கனிமொழி கருணாநிதி
இப்பட்டியலில் 11 புதிய முகங்கள், 3 பெண்கள், 2 முனைவர்கள், 2 மருத்துவர்கள், 2 ஒன்றிய செயலாளர்கள், 6 வழக்கறிஞர்கள் போட்டியிட வாய்ய்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தருமபுரி: ஆ.மணி
ஆரணி: தரணிவேந்தன்
கள்ளக்குறிச்சி: தே. மலையரசன்
சேலம்: டி.எம். செல்வகணபதி
ஈரோடு: பிரகாஷ்
கோவை: கணபதி ராஜ்குமார்
பொள்ளாச்சி: ஈஸ்வரசாமி
பெரம்பலூர்: அருண் நேரு
தஞ்சாவூர்: முரசொலி
தேனி: தங்க தமிழ்செல்வன்
தென்காசி: ராணி ஸ்ரீகுமார்
ஆகியோர்.