தஷ்வந்த் தண்டனை விவரம்: 31 ஆண்டுகள் கடுங்காவல், தூக்கு!

தஷ்வந்த் தண்டனை விவரம்: 31 ஆண்டுகள் கடுங்காவல், தூக்கு!
தஷ்வந்த் தண்டனை விவரம்: 31 ஆண்டுகள் கடுங்காவல், தூக்கு!
Published on

குற்றவாளி தஷ்வந்துக்கு வழங்கப்பட்ட தண்டனை விவரத்தை, சிறுமியின் பெற்றோர் தரப்பு மற்றும் திமுக வழக்கறிஞர் கண்ணதாசன் கூறினார்.

நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “குற்றவாளி தஷ்வந்த் மீது இந்தியத் தண்டனைப் பிரிவின் கீழ் சாட்டப்பட்ட 5 குற்றங்களும் நீருப்பிக்கப்பட்டதாக நீதிபதி தெரிவித்தார். குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளும் நிரூபிக்கப்பட்டதாகவும், அதன்படி குற்றவாளிக்கு தண்டனைப்பிரிவு 363ன் கீழ், பெற்றோரிடமிருந்து குழந்தையை கடத்துதல் என்ற பிரிவின் கீழ் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பாலியல் துன்புறுத்தலுக்காக குழந்தையைக் கடத்திய குற்றத்திற்காக 366ன் கீழ் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், குழந்தையை மானபங்கப்படுத்திய குற்றத்திற்கு 354பி பிரிவின் கீழ் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தடயங்களை மறைக்க முயற்சித்ததற்காக பிரிவு 201ன் கீழ் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. 

ஆக, மொத்தம் 31 வருடங்கள் கடுங்காவல் தண்டனையும், 302 பிரிவின் கீழ் கொலைக் குற்றத்திற்கு மரண தண்டனை வழங்கியும் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் குழந்தைகள் பாலியல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 6ன் கீழ் 10 ஆண்டுகளும், பிரிவு 8ன் கீழ் 5 ஆண்டுகளும் என 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பால் அரசு தரப்பு மற்றும் பாதிக்கப்பட்ட பெற்றோர் தரப்பு நிம்மதியடைந்துள்ளனர். இந்த வழக்கில் மேல்முறையீட்டுக்கு வாய்ப்பு உள்ளது. அவ்வாறு செய்தால், குற்றவாளி தரப்பு வாதத்தை பொருத்து எங்கள் வாதத்தை முன்வைப்போம். இந்தத் தீர்ப்பின் மூலம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தை ஒரு சாதாரணமான தீர்ப்பாக எடுத்துக்கொள்ளாமல், நீதிமன்றம் விரைந்து விசாரித்து உச்சபட்ட தீர்ப்பை வழங்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது” என்று கூறினார். 

தண்டனை விவரம்:

பெற்றோரிடமிருந்து குழந்தையை கடத்துதல் குற்றம்:  7 ஆண்டுகள் கடுங்காவல்

பாலியல் துன்புறுத்தலுக்காக குழந்தையை கடத்திய குற்றம்:  10 ஆண்டுகள் கடுங்காவல்

குழந்தையை மானபங்கப்படுத்திய குற்றம்:  7 ஆண்டுகள் கடுங்காவல்

தடயங்களை மறைக்க முயற்சித்த குற்றம்:  7 ஆண்டுகள் கடுங்காவல்

மொத்தம் 31 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

கொலை குற்றம்: 302ன் கீழ் மரண தண்டனை

குழந்தைகள் பாலியல் தடுப்பு சட்டம்:  10 ஆண்டுகள் சிறை

குழந்தைகள் பாலியல் தடுப்பு சட்டம்:  5 ஆண்டுகள் சிறை

மொத்தம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com