நிறுத்திவைக்கப்பட்ட திமுக ஆ.ராசா, அதிமுக லோகேஷ் வேட்புமனுக்கள்.. அடுத்தடுத்து நடந்த ட்விஸ்ட்!

திமுக வேட்பாளர் ஆ.ராசா மற்றும் அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் போன்றோரது வேட்புமனுக்கள் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், பின் ஏற்பு.
ஆ.ராசா
ஆ.ராசாpt web
Published on

செய்தியாளர் - ஜான்சன்

18-வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. முதற்கட்ட வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 20-ஆம் தேதி தொடங்கிய வேட்புமனுத்தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. 1,403 வேட்பாளர்கள் உட்பட மொத்தமாக 1,749 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதிகபட்சமாக கரூர் மக்களவை தொகுதியில் 62 வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. இதனையடுத்து, தகுதியுள்ள வேட்பாளர்கள் குறித்த விவரங்கள் தேர்தல் ஆணையம் வெளியிடும். வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற நாளை மறுநாள் கடைசி நாளாகும்.

ஆ.ராசா
ஓபிஎஸ் முதல் செல்வகணபதி வரை.. வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய பிரபலங்கள்!

ஆ.ராசா, லோகேஷ் தமிழ்ச்செல்வன் மனுக்கள் நிறுத்திவைப்பு!

இந்நிலையில் நீலகிரி மக்களவைத் தொகுதியின் சிட்டிங் எம்.பியும், வேட்பாளருமான ஆ.ராசாவின் வேட்புமனு இன்று திடீரென நிறுத்தி வைக்கப்பட்டது. அவருடன் அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் மனுவும் நிறுத்தி வைக்கப்பட்டது. காலை முதலே தொடர்ச்சியாக வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடந்துகொண்டிருக்கும் சூழலில், இருவரது வேட்புமனுக்களும் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டன அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியது. பின் சில மணி நேரத்திலேயே இரு மனுக்களும் ஏற்கப்பட்டன.

முன்னதாக நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட 33 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில், பாஜக வேட்பாளர் எல்.முருகன், நாம் தமிழர் வேட்பாளர் ஜெயக்குமார் போன்றோரது வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டிருந்தன.

ஆ.ராசா
மக்களவை தேர்தல் 2024 | "ED, INCOME TAX, CBI-க்கு பயப்படாத ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின்" - ஆ.ராசா

ஆ.ராசா, லோகேஷ் வேட்புமனுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டு... பின் ஏற்கப்பட்டது ஏன்?

ஆ.ராசா, லோகேஷ் இருவரது வேட்புமனுவிலுமே இந்து என குறிப்பிட்டு சாதி பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரி அருணா முன்னிலையில் இந்த வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், ‘இந்து என்ற வார்த்தையை பயன்படுத்தி சாதி பெயர் போடக்கூடாது’ என்று கூறப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் மற்ற வேட்பாளர்களும் ஆட்சேபனை தெரிவித்ததால் இரண்டு மனுக்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து சென்னையில் உள்ள உயர் தேர்தல் அதிகாரிகளிடம் பரிசீலித்த பிறகு முடிவு எட்டப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பரிசீலித்தப்பின் இரண்டு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com