மதுபானக்கடைகளை மூட வலியுறுத்தி தேமுதிக கூட்டத்தில் தீர்மானம் !

மதுபானக்கடைகளை மூட வலியுறுத்தி தேமுதிக கூட்டத்தில் தீர்மானம் !
மதுபானக்கடைகளை மூட வலியுறுத்தி தேமுதிக கூட்டத்தில் தீர்மானம் !
Published on

தேர்தல் வாக்குறுதிப்படி தமிழகத்தில் மதுபானக்கடைகளை உடனடியாக மூட வலியுறுத்தி தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

விஜயகாந்த் தலைமையில் தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று போராட்டத்திற்கு ஒரு குழு அமைத்து விசாரணை நடத்தி நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை உடனடியாக குறைக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக அரசு 2016இல் அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி மதுபானக்கடைகளை உடனே மூட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மழைநீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க புதிதாக அணைகள் கட்ட வேண்டும், குண்டும் குழியுமாக உள்ள நெடுஞ்சாலைகளை சீரமைக்க வேண்டும் எனவும் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழக வீரர் நடராஜனுக்கு பாராட்டு தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com