“விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார்.. விரைவில் வீடு திரும்புவார்; வதந்திகளை நம்ப வேண்டாம்” - பிரேமலதா

”கேப்டன் நலமாக இருக்கிறார்” என விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த், பிரேமலதா
விஜயகாந்த், பிரேமலதாட்விட்டர்
Published on

கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைபாடு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும் அவரின் உடல் நிலை சீராக இருக்கிறது என்றே மருத்துவமனை தெரிவித்திருந்தது. இயற்கையாகவே சுவாசிக்கிறார் என்றும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று அவரின் உடல்நிலை சீராக இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “விஜயகாந்த்தின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது” என்று தெரிவித்திருந்தது.

விஜயகாந்த், பிரேமலதா
“தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை” - மியாட் மருத்துவமனை அறிக்கை

இதையடுத்து, பல்வேறு அரசியல் தலைவர்களும், அவரது ரசிகர்களும் தொண்டர்களும் ‘விஜயகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும்’ என்று பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். அவரது குடும்பத்திற்கு ஆறுதலும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த், எக்ஸ் வலைத்தளத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசியிருக்கும் அவர், ‘இன்று காலை மருத்துவமனை நிர்வாகம் கொடுத்தது வழக்கமான மருத்துவ அறிக்கைதான். அதில் பதட்டப்படவோ, பயப்படவோ ஒன்றும் இல்லை. கேப்டன் அவர்கள் நல்ல உடல் ஆரோக்யத்துடன் இருக்கிறார். நானும் மருத்துவமனையில் இருந்து பார்த்து வருகிறேன். வெகுவிரைவில் பூரண குணமடைந்து வெகு விரைவில் உங்கள் அனைவரையும் சந்திப்பார். அத்தனை பேருடைய பிரார்த்தனையும், அவருடைய தர்மமும் நிச்சயம் காப்பாற்றும். கடைக்கோடி தொண்டர்கள் உட்பட யாரும் பயப்பட வேண்டாம். யாரும் எவ்வித வதந்திகளையும் நம்ப தேவையில்லை. விரைவில் விஜயகாந்த் வீடு திரும்புவார்’ எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: வழிகாட்டிய தோழன்! வாரன் பஃபெட்டின் நண்பர் சார்லஸ் முங்கர் மறைவு- 50 ஆண்டு நட்பு சாத்தியமானது எப்படி?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com