ஈரோடு கிழக்கு: சுயேட்சையைவிட குறைவான வாக்குகளை பெற்ற தேமுதிக!

ஈரோடு கிழக்கு: சுயேட்சையைவிட குறைவான வாக்குகளை பெற்ற தேமுதிக!
ஈரோடு கிழக்கு: சுயேட்சையைவிட குறைவான வாக்குகளை பெற்ற தேமுதிக!
Published on

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளரைவிட குறைந்த வாக்குகளையே பெற்று பின்தங்கியுள்ளது தேமுதிக.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (மார்ச் 2) எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணி முதல் தொடங்கிய இந்த வாக்கு எண்ணிக்கையானது சித்தோடு பகுதியில் உள்ள அரசினர் பொறியியல் கல்லூரியில் 16 மேஜைகளில் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த வாக்கு எண்ணிக்கை பணிக்காக மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் காவல்துறை, துணை ராணுவம் என 450 பேர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது போக வாக்கு எண்ணும் மையத்திலேயே 600 காவலர்களும் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதுவரை முதல் இரண்டு சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவுற்றுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி பெரும் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது. இரண்டாம் இடத்தில் அதிமுகவும், மூன்றாம் இடத்தை நாம் தமிழர் கட்சியும் பிடித்துள்ள நிலையில், தேமுதிக மிகவும் பின்தங்கிய வாக்குகளையே பெற்றிருக்கிறது.

அதாவது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முதல் சுற்று முடிவில் சுயேட்சை வேட்பாளர் முத்து பாவா 178 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 112 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். இதனிடையே நோட்டாவுக்கு 182 வாக்குகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டு சுற்றுகளின் முடிவில் 12 வேட்பாளர்கள் ஒரு வாக்கு கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com