தமிழகத்தில் புதிய மோட்டார் வாகன சட்டத்தில் உள்ள அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஓய்வு பெற்ற 6,283 அரசு பஸ் ஊழியர்களுக்கு ரூ.1,093 கோடி ஓய்வூதிய தொகை தரப்பட்டது. ஓய்வூதியம் வழங்கிடும் அடையாளமாக 9 பேருக்கு காசோலை தந்தார் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் புதிய மோட்டார் வாகன சட்டத்தில் உள்ள அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதல் பெற்று அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் எனவும் உறுதியளித்தார்.
மேலும் “அக்டோபார் 23 ஆம் தேதி தீபாவளி சிறப்பு அரசு பேருந்து முன்பதிவு தொடங்கும். சென்னையிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு வழக்கமான தடத்தில் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். புதிய பேருந்து நிலைய பணி நடப்பதால் ஊரப்பாக்கத்தில் சிறப்பு பேருந்துகளை இயக்குவது பற்றி ஆராய்ந்து முடிவு செய்யப்படும். மாதவரத்தில் இருந்து ஆந்திராவுக்கும், பூந்தமல்லியில் இருந்து வேலூருக்கும் பேருந்துகள் இயக்கபடும். தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூர் பேருந்துகள் இயக்கப்படும்.” எனத் தெரிவித்தார்.