''சசிகலாவின் உயிருக்கு ஆபத்து'' - சந்தேகம் கிளப்பும் திவாகரன்!

''சசிகலாவின் உயிருக்கு ஆபத்து'' - சந்தேகம் கிளப்பும் திவாகரன்!
''சசிகலாவின் உயிருக்கு ஆபத்து'' - சந்தேகம் கிளப்பும் திவாகரன்!
Published on

சசிகலா வரும் 27-ஆம் தேதி விடுதலையாக உள்ள நிலையில் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதாக சந்தேகமாக இருக்கிறது என்று சசிகலாவின் தம்பி திவாகரன் தெரிவித்துள்ளார்

இதுதொடர்பாக, சசிகலாவின் தம்பி திவாகரன் நள்ளிரவில் தொலைபேசி வாயிலாக புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், ''சசிகலாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று எங்களுக்கு 20-ஆம் தேதி மாலை 4 மணியளவில் தகவல் வந்தவுடன் எனது மகன் ஜெய்ஆனந்த், எனது அண்ணன் மகன் மற்றும் மருமகன் ஆகியோர் பெங்களூரு சென்றனர்.இதில் என் அண்ணன் மகன்,மருமகன் இருவரும் அப்போலா மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலா கடந்த ஒரு வாரகாலமாக காய்ச்சலில் இருந்துள்ளார். சிறையில் அவருக்கு சரியான சிகிச்சையளிக்கவில்லை.அவருக்கு 20 ம்தேதி மாலை மூச்சுத்திணறல் ஏற்பட்ட பிறகுதான், வழக்கமாக சிறை கைதிகளுக்கு சிகிச்சையளிக்க கூடிய மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.சாதாரண எக்ஸ்ரே எடுத்து பார்த்துள்ளனர்.

மூச்சுத் திணறல் ஏற்பட்டால் சிடி ஸ்கேன் எடுத்து பார்த்து, அதன்பின் சிகிச்சை அளிக்க வேண்டும். ஆனால், அந்த மருத்துவமனையில் சிடி ஸ்கேன் வசதியில்லை. தனியார் மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டுமாம். இதற்கு நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும் என்கிறார்கள். சசிகலாவிற்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் .அதற்கான சிகிச்சை அளிக்கக் கூடிய மருத்துவமனை இதுவல்ல.

வரும் 27 ஆம் தேதி சசிகலா விடுதலையாக உள்ள நிலையில், அவருக்கு சரியான சிகிச்சை அளிக்காமல் காலதாமதப்படுத்துகின்றனர். எனவே, அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.எங்களுக்கு துரோகத்திற்கு மேல் துரோகம் நடந்துவருகிறது. பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள். தற்போது பணம் எது வரை பாய்ந்தது என்று தெரியவில்லை'' என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com