புதுக்கோட்டை: "பெண் குழந்தைகளை கருவிலேயே அழிப்பதா?" - மாவட்ட ஆட்சியர் அருணா வேதனை

புதுக்கோட்டையில் பெண் குழந்தைகளை கருவிலேயே அழிக்கும் செயல் அதிகமாக நடக்கிறது என்று மாவட்ட ஆட்சியர் அருணா வேதனையுடன் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர் அருணா
மாவட்ட ஆட்சியர் அருணாpt desk
Published on

செய்தியாளர்: சுப.முத்துப்பழம்பதி

78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் பூங்கொடி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அருணா பங்கேற்று பொதுமக்களின் குறைகளை நேற்று கேட்டறிந்தார்.

கிராம சபைக் கூட்டம், புதுக்கோட்டை
கிராம சபைக் கூட்டம், புதுக்கோட்டைஎக்ஸ் தளம்

இதைத் தொடர்ந்து அங்கு பேசிய அவர்...

“இந்த கிராம சபைக் கூட்டத்தில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஊராட்சியில் அனைத்து குழந்தைகளும் பள்ளி செல்கிறார்கள் என தீர்மானம் நிறைவேற்றி இருப்பது இன்னும் கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது. கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்பதை தெரிந்து கொண்டு, பெண் குழந்தைகளை கருவிலே அழிக்க வேண்டும் என்ற எண்ணம் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகமாக உள்ளது, அந்த எண்ணம் நமக்கு வேண்டாம். பெண் குழந்தைகள் உயர்ந்து வருவார்கள் என்ற நம்பிக்கை வேண்டும்.

மாவட்ட ஆட்சியர் அருணா
கும்பக்கரை ஆற்றுப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு - 5 குழந்தைகள் உட்பட 9 பேர் மீட்பு

ஒரு தாய், தனது முதல் குழந்தையும் இரண்டாவது குழந்தையும் பெண்ணாக இருந்த நிலையில், மீண்டும் அவர் மூன்றாவதாக கருத்தரித்திருந்த நிலையில், சட்ட விரோதமாக ஸ்கேன் செய்து, அந்த ஸ்கேனில் இருப்பது பெண் குழந்தை என்பதை தெரிந்து கொண்டு அந்த குழந்தையை அழிக்க முயற்சி செய்துள்ளன.

அதில் அந்த தாய் இறந்து போகவே தற்போது அவரது இரண்டு பெண் குழந்தைகளும் தாயின்றி அனாதையாக உள்ளனர். இது போன்ற சம்பவங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்து விடக்கூடாது என்பதில் மக்கள் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும்,

Baby
BabyPT Desk

பெண்ணாக இருந்தாலும் சரி. ஆணாக இருந்தாலும் சரி, கல்வியை மட்டும் கொடுத்தால் அவர்கள் உயர்வார்கள். சட்டத்துக்கு புறம்பாக யாரும் இது மாதிரி செய்ய வேண்டாம் என தயவு கூர்ந்து கேட்டுக் கொள்கிறேன். சட்டத்திற்குப் புறம்பாக இது போல் யாரும் சென்றாலோ அல்லது எந்த ஸ்கேன் சென்டரில் இதுபோல ஸ்கேன் செய்தாலோ அவர்கள் குறித்து எங்களுக்கு தகவல் தெரிவித்தால், சம்பந்தப்பட்ட ஸ்கேன் சென்டர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்” என்று தெரிவித்தார் ஆட்சியர் அருணா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com