குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று முதல் ரூ.2000 பணம் விநியோகம்

குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று முதல் ரூ.2000 பணம் விநியோகம்
குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று முதல் ரூ.2000 பணம் விநியோகம்
Published on

தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் இன்று முதல் வழங்கப்படுகிறது.

ஆட்சிக்கு வந்தவுடன், கொரோனா நிவாரண நிதியாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை கடந்த 10ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைகளில் நிவாரண நிதி வழங்கும் பணி இன்று தொடங்கியது. கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன் , கூட்ட நெரிசலின்றி, நிவாரணம் வழங்குவதற்காக டோக்கன் முறை பின்பற்றப்படுகிறது. மக்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து நீண்ட வரிசையில் காத்திருந்து நிவாரணத் தொகையை பெற்றுச் செல்கின்றனர்.

நாள் ஒன்றுக்கு ஒரு கடையில் 200 நபர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. பயனாளர்கள் தங்களது டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாளில், ரேஷன் கடைகளுக்கு நேரடியாகச் சென்று பணத்தை பெறுகின்றனர். 2 கோடியே 7 லட்சத்து 66 ஆயிரத்து 950 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. இதற்காக 4 ஆயிரத்து 153 கோடியே 33 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com