ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு; அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை: ரஜினிகாந்த்

ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு; அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை: ரஜினிகாந்த்
ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு; அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை: ரஜினிகாந்த்
Published on

ரஜினி மக்கள் மன்றம் கலைக்கப்படுவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

நிர்வாகிகளுடன் ஆலோசையில் ஈடுபட்ட நிலையில், அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை எனவும் ரஜினி மக்கள் மன்றம் கலைக்கப்படுவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இனி, ரஜினி மக்கள் மன்றம், ரஜினி ரசிகர் நற்பணிமன்றமாக செயல்படும் எனவும் கூறியுள்ளார்.

முன்னதாக, தமிழகத்தில் கொரோனா பரவி வந்த சூழலில், தன்னால் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கைவிடுவதாக நடிகர் ரஜினிகாந்த் ஏற்கெனவே அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் பணிகளில் அவர் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்த பலர் வேறு கட்சிகளில் இணையத் தொடங்கினர். மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்ற ரஜினிகாந்த் கடந்த 9ஆம் தேதி சென்னை திரும்பினார். இந்த நிலையில், இன்று ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார். 

அதற்கும் முன் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், “நான் அரசியலுக்கு வரப்போவதில்லை என அறிவித்த பிறகு மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்க முடியவில்லை. காரணம், அண்ணாத்த படப்பிடிப்பு முடிவதில் தாமதமாகிவிட்டது. உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்கா சென்று வந்தேன். மக்கள் மன்றத்தை தொடரலாமா? தொடர்ந்தால் என்ன பணிகள்? நானும் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரப்போறேனா? இல்லையா? என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் நிறைய கேள்விகள் இருக்கின்றன. இதுகுறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசிக்க உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com