”எங்கள் உழைப்பு, பணம் எல்லாம் விரயம்” நாதகவில் தொடரும் அதிருப்தி! விழுப்புரம் மாவட்ட நிர்வாகி விலகல்

விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்து விலகுவதாக அபூ.சுகுமார் தெரிவித்துள்ளார்.
சீமான், அபூ.சுகுமார்
சீமான், அபூ.சுகுமார்pt web
Published on

கடந்த சில தினங்கள் முன் கிருஷ்ணகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் செய்தியாளர்களைச் சந்தித்தப்போது, ’நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாவட்ட நிர்வாகிகளோடு எவ்வித ஆலோசனைகளையும் மேற்கொள்ளாமல் தனிச்சையாக முடிவெடுக்கிறார். இத்தனை வருடங்கள் ஆகியும் ஒரு எம்எல்ஏ கூட பெறமுடியவில்லை’ என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்திருந்தனர்.

சீமான்
சீமான்pt web

இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட வடக்கு செயலாளர் அபூ.சுகுமார், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

சீமான், அபூ.சுகுமார்
”உங்களிடமிருந்து இந்த வார்த்தைகளை கேட்பது பெருமை..”! பவன் கல்யாணிற்கு நன்றி சொன்ன லோகேஷ் கனகராஜ்!

எதையும் அவர் பொருட்படுத்தவில்லை

இதுதொடர்பாக அவர் வெளிட்டுள்ள அறிக்கையில், “நாம் தமிழர் கட்சியில் கடந்த 9 ஆண்டுகளாக என்னால் முடிந்த வரை அனைத்து கட்சி பணிகளும் சிறப்பாக செய்தேன். 2015 இல் முதன்முதலாக செஞ்சி நகர செயலாளராக நியமிக்கப்பட்டு, 2018 தொகுதி செயலாளர் ஆகவும் 2020 இல் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் ஆகவும் மற்றும் 2001 சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராகவும் இருந்தோம். இரண்டு நாடாளுமன்றத் தேர்தல் இரண்டு சட்டமன்றத் தேர்தல் ஒரு உள்ளாட்சித் தேர்தல் என அனைத்து தேர்தலிலும் நாம் சிறப்பாக வேலை செய்தோம்.

அதேபோல உள்ளாட்சித் தேர்தலில் கட்சி சின்னத்தில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் 100% வேட்பாளரை நிரப்பினோம், கட்சியின் கிளை பொறுப்புகளை முடிந்த அளவு இதுவரை நிரப்பி அண்ணனிடம் கையொப்பமும் வாங்கினோம். மாவட்டத்தின் சிறந்த தொகுதியாக செயல்பட்டு வந்தோம். இது நாள் வரை நாம் செய்த செயல்கள் உடல் உழைப்பு மற்றும் பண விரயம் இவை எவையும் அவர் பொருட்படுத்தும் படி இல்லை, இது அனைத்து பொறுப்பாளருக்கும் சமம்.

சீமான், அபூ.சுகுமார்
ஆத்தூர்: பேட்டரி சைக்கிள் வடிவமைத்த அரசுப்பள்ளி மாணவர்... அமைச்சர் அன்பில் மகேஸ் பாராட்டு!

அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன்

அண்ணன் கூறியது: இந்த தொகுதியில் உள்ள எவருக்கும் நான் பதில் சொல்ல முடியாது மற்றும் நீங்கள் என்னிடம் கேள்வியும் கேட்க கூடாது, என் இஷ்டப்படிதான் நான் செய்வேன், நீங்கள் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள், உங்களை யாகும் போஸ்டர் ஒட்டவும் சொல்லவில்லை, செலவு செய்யவும் கூறவில்லை என்று கூறினார்.

'நாதகவில் உழைப்புக்கு மரியாதை, அங்கீகாரம் இல்லை' - சுகுமார் அறிக்கை
'நாதகவில் உழைப்புக்கு மரியாதை, அங்கீகாரம் இல்லை' - சுகுமார் அறிக்கை

ஒன்றுக்கு இருமுறை பேசியும் நான் செய்வது தான் செய்வேன். நீங்கள் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள் என்று கூறியதன் அடிப்படையில், அண்ணா நாங்கள் உங்களிடம் கேட்டது பணமோ பொருளோ அல்ல எங்களுக்கான மரியாதை மற்றும் எங்களுக்கான அங்கீகாரம். இதுவே உங்களால் தர முடியவில்லை. எனவே மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன் நாம் தமிழர் கட்சியில் இருந்து அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினரிலிருந்து விலகுகின்றேன்” என தெரிவித்துள்ளார்.

சீமான், அபூ.சுகுமார்
”கட்சியின் பெயரை சொல்லி அவர் 5 கோடியை வசூல்..” - விலகிய நிர்வாகியின் குற்றச்சாட்டுக்கு சீமான் பதில்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தபோது செய்தியாளர்கள் கிருஷ்ணகிரி நிர்வாகிகள் விலகல் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான், “கட்சியின் பெயரை சொல்லி 5 கோடி ரூபாயை வசூலித்துள்ளார். என் முகத்திற்காக யாரும் வழக்கு தொடுக்காமல் உள்ளனர். இது என் கட்சிப் பிரச்னை, என் பிரச்னை, இதை நான் எதிர்கொள்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com