கோவை மாவட்ட காவல்துறை அறிக்கைக்கு பதில் தெரிவித்து இயக்குநர் கே.பாக்யராஜ் வீடியோ!

"கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளது. இது செய்தித்தாள்களிலும் கூட வந்துள்ளது என்பதை நண்பர்கள் மூலமாகத் தெரிந்து கொண்டேன்" என இயக்குநர் கே.பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.
காவல்துறை அறிக்கை கே.பாக்யராஜ் பதில்
காவல்துறை அறிக்கை கே.பாக்யராஜ் பதில்புதிய தலைமுறை
Published on

“நெஞ்சு பொறுக்குதில்லையே!" - இயக்குநர் கே.பாக்யராஜ் வெளியிட்ட வீடியோ!

இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் சில தினங்களுக்கு முன்னர் (பிப்ரவரி 12-ல்) தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றினை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், “மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை உள்ளிட்ட இடங்களில் நாங்கள் படப்பிடிப்பிற்காகச் சென்ற போது அம்பரபாளையம் ஆற்றில் குளிப்பதற்காகச் சுற்றுலாத் துறையினர் அதிகளவில் வந்து செல்வார்கள்.

அப்போது ஆற்றின் சுழலில் சிக்கி இறந்து போய்விடுவார்கள் என்றும், இப்படி இறந்து போகும் நபர்களின் உடல்களை மீட்க அங்குத் தண்ணீருக்குள் தம் கட்டிக்கொண்டு இருப்பவர்கள் இழுத்துச் சென்று பாறைக்குள் சிக்க வைத்து விடுவார்கள் என்றும், பின்னர் உடலை மீட்டுக் கொடுக்க வசதிக்கேற்ப பணம் வாங்கிக் கொள்வார்கள் என்றும் அங்கிருந்தோர் எனக்கு கூறினர். இந்த விஷயம் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது” எனக் கூறியிருந்தார். இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காவல்துறை அறிக்கை கே.பாக்யராஜ் பதில்
2014-ல் தன் 1 மாத குழந்தையை கடத்திய பெண்ணை இப்போது பார்த்த தந்தை... ஓர் உணர்வுப் போராட்டம்

உண்மை என்ன?

இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மை அறியும் குழு விளக்கம் ஒன்றினை வெளியிட்டது. அதில் பாக்யராஜின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் அளித்த விளக்கம் இடம்பெற்றிருந்தது.

அதில், "திரு.பாக்யராஜ் அவர்களின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றதாகும். அதுபோன்ற குற்றச் சம்பவம் ஒன்றுகூட மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் பதிவாகவில்லை. பத்ரகாளியம்மன் கோவில் அருகில் உள்ள ஆற்றுப் பகுதியில் 2022, 2023ல் எவ்வித உயிரிழப்பு சம்பவமும் நடக்கவே இல்லை. வதந்தியை உருவாக்குவதும் பரப்புவதும் குற்றச் செயல்கள்" என குறிப்பிடப்பட்டிருந்தது.

காவல்துறை அறிக்கை கே.பாக்யராஜ் பதில்
Fact Check: உண்மையில் ராமர் பிரதிஷ்டை சிறப்பு பூஜைக்கு மறுப்பு வழங்கப்பட்டதா? நடந்தது என்ன?

இந்நிலையில் காவல்துறையின் அந்த அறிக்கைக்கு இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் பதில் தெரிவித்து நேற்று மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். 

அதில் அவர், “40 ஆண்டுகளுக்கு முன்பு மேட்டுப்பாளயம் நெல்லித்துறைக்கு பகுதிக்கு நான் ஷூட்டிங் போன அந்த பகுதி மக்கள் இதை என்னிடம் கூறினார்கள். நெல்லித்துறை கிராமத்திற்குச் செல்ல பாலம் வசதி இல்லை என்பதால் அந்த மக்கள் ஆற்றைக் கடந்து செல்ல வேண்டும் எனக் கூறினார்கள். இந்த ஆற்றில் குளிக்க வரும் நபர்களை சில தப்பான நபர்கள் அவர்களின் காலை பிடித்து இழுத்துச் சென்று பாறைக்கு அடியில் சிக்க வைத்து விடுவார்களாம்.

பிறகு அவர்களே தேடுவது போல நடித்து பணம் பறிப்பார்கள். கொஞ்சம் கூட உயிருக்கு மதிப்பளிக்காமல் இப்படிச் செய்வது குறித்து "நெஞ்சு பொறுக்குதில்லையே" என்று ஒரு வீடியோ எக்ஸ் தளத்தில் பதிவு செய்தேன்.

காவல்துறை அறிக்கை கே.பாக்யராஜ் பதில்
பொள்ளாச்சி: ஹை பீம் விளக்குகளை ஒளிரச் செய்து யானையை விரட்டிய அதிமுக பிரமுகருக்கு வனத்துறை அபராதம்

எப்போதும் காவலர்களுக்குத் தவறு நடப்பது தெரியாது; தவறு நடந்து முடிந்த பிறகுதான் கண்டுபிடிப்பார்கள். இன்னொரு விஷயம், அன்றைய தினம் நான் வெளியிட்ட வீடியோவில் எந்த இடத்திலும் காவல்துறையை நான் தொடர்புப்படுத்திப் பேசவில்லை. நான் கூறியதின் நோக்கம் ‘இது போன்று தவறு நடந்தால் கவனமாக இருக்க வேண்டும்’ என்பதுதான்.

நான் வீடியோ வெளியிட்ட நேரத்தில் என் நண்பர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சமீபத்தில் இமாச்சலப்பிரதேசத்தில் கார் விபத்தில் பலியானார். வெற்றி துரைசாமியின் உடலைக் கண்டுபிடித்துக் கொடுத்தால் 1 கோடி பரிசு என அறிவித்தார்கள்.

இச்சம்பவத்தினுடன் சிலர் என் வீடியோவை இதோடு தொடர்புப்படுத்தி பேசிவிட்டனர். ஒரு ஊடக நண்பர் ஒருவர், ‘பாக்யராஜ் வெளியிட்ட வீடியோவுக்கு, வெற்றி துரைசாமி விபத்துக்கும் சம்பந்தம் உள்ளதா, இதைப் பற்றி நீங்கள் என நினைக்கிறீர்கள்?’ எனக் கொளுத்திப் போட்டுள்ளார். இதனால் என்னுடைய வீடியோவை திருப்பி திருப்பி போட்டு கருத்து தெரிவித்தனர்.

இந்த வீடியோ காவல்துறையினருக்குச் சென்று அவர்களிடம் கருத்துக் கேட்டுள்ளனர்.இதற்கு மறுப்பு தெரிவித்து ‘அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை; இது வதந்தி’ என போலீசாரும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. செய்தித்தாள்களிலும் கூட வந்துள்ளது என்பதை நண்பர்கள் மூலமாகத் தெரிந்து கொண்டேன்" என்றுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com