“இவங்களாம் பேச்சாளர்களா! கல்லூரிகளில் ஏன் சினிமா நிகழ்வுகள்” – முதல்வருக்கு இயக்குநர் அமீர் கடிதம்!

சென்னை அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், பிற்போக்குத்தனமான விஷக் கருத்துகளைப் பரப்பிய மகா விஷ்ணுவின் மீது நடிவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து நடிகரும் இயக்குநருமான அமீர் கடிதம் எழுதியுள்ளார்.
Director ameer
Director ameerPT web
Published on

சென்னை அசோக் நகரில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தன்னம்பிக்கை பேச்சாளர் என்ற பெயரில் மகாவிஷ்ணு என்பவர் பிற்போக்குத் தனமான கருத்துக்களை பேசியது பெரும் விவாதப்பொருளானது. பலரும் இதற்கு தங்களது கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகிறது. இந்த விவகாரத்தில் மகாவிஷ்ணுவை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகரும், திரைப்பட இயக்குனருமான அமீர், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

கடிதம் விவரம்:-

தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்!

சென்னை அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், பிற்போக்குத்தனமான விஷக் கருத்துகளைப் பரப்பிய மகா விஷ்ணுவின் செயலைக் கண்டித்ததோடு அவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதியும் அளித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்-க்கும், அவரது வார்த்தைக்கேற்ப உரிய நடவடிக்கையை எடுத்த தமிழக காவல்துறைக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளும், நன்றியும்.

Letter copy
Letter copypt desk

விழிப்போடு செயல்பட வேண்டிய தருணம் இது.!

சக மனிதனை பிறப்பின் அடிப்படையில் தாழ்த்திப் பார்க்கின்ற சனாதன கருத்திற்கு எதிராக விழித்துக் கொண்டிருக்கும் தமிழினத்தை, இப்போது ஆன்மிகம் என்கிற போர்வையில் “முற்பிறவி பாவங்கள்” என்ற சொல்லின் மூலம், வர்க்க ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் மீண்டும் ஒரு கும்பல் அடிமையாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து தமிழக அரசு விழிப்போடு செயல்பட வேண்டிய தருணம் இது.! என்பதையே அசோக் நகர் அரசினர் மகளிர் பள்ளியின் நிகழ்வு நம் எல்லோருக்கும் உணர்த்துகிறது.

Director ameer
மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறு பேச்சு - யூடியூப் சேனலில் இருந்து வீடியோ நீக்கம்!

தமிழாசிரியரை தலைமை ஆசிரியராக நியமியுங்கள்!

தங்கள் கண் முன்னே நடைபெற்ற பிற்போக்குத்தனமான, மூட நம்பிக்கையான பேச்சுக்களை தடுக்காமல், கண்டும் காணாமல் நின்று கொண்டிருந்த ஆசிரியப் பெருந்தகைகளுக்கு மத்தியில் தனது ஞானக்கண் கொண்டு அநீதியை தட்டிக் கேட்ட மானமிகு தமிழாசிரியர் சங்கர் அவர்களுக்கு அமைச்சர் உள்ளிட்டோர் பாராட்டுக்களை வழங்கியதோடு நின்றுவிடாமல், அதே பள்ளியில் அவரைத் தலைமை ஆசிரியராக நியமிக்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களையும் தமிழக முதல்வர் அவர்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

மகா விஷ்ணு
மகா விஷ்ணுpt web

கல்விக் கூடங்களில் சோஷியல் மீடியா பிரபலங்கள் ஏன்?

சமூகத்தை வழி நடத்தக்கூடிய அறிவார்ந்த நாளைய தலைமுறையை உருவாக்கும் பட்டறையாக கல்வி நிலையங்களை உருவாக்க வேண்டியது அரசின் கடமை மட்டுமல்லாது சமூகப் பொறுப்புள்ள அனைவரின் கடமை என்பதை மறந்து, சமீப காலமாக தமிழ் நாட்டு கல்வி நிறுவனங்களில், இன்ஸ்டாகிராம், ரீல்ஸ் போன்ற சமூக வலைதளங்களிலும் யூட்யூப் போன்ற ஊடகத்திலும் பிரபலமானவர்களையும் அழைத்து மாணவர்களிடையே உரையாடச் செய்வது அதிகரித்து வருகிறது.

Director ameer
நடிகர் சங்கத்தின் கட்டடப் பணி|இணைந்து நடிக்கும் ரஜினி - கமல்? கார்த்தி கொடுத்த சூப்பர் அப்டேட்

திரை அரங்கங்கள் கல்விக்கூடமாக மாற வேண்டுமே, தவிர கல்விக்கூடங்கள் திரை அரங்குகளாக மாறி விடக்கூடாது

எந்த விதமான கல்வித் தகுதியோ, அறிவில் தேர்ச்சியோ, ஞான முதிர்ச்சியோ, முற்போக்குச் சிந்தனையோ இல்லாதவர்களை மாணவர்களின் முன்னிலையில் கொண்டு வந்து நிறுத்தி அவர்களை நாயகர்களாக சித்தரிப்பதும் மாணவர்களுக்கு அவர்களை அறிவுரை வழங்கச் சொல்வதும் மிகவும் வேதனைக்குரிய விசயமாகும். அதே போல, பள்ளி கல்லூரிகளில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளுக்கு தலைமை ஏற்க அல்லது சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள திரைக் கலைஞர்கள் பங்கு பெறுவது ஏற்புடையதாகவே இருந்தாலும், வணிக நோக்கத்திற்காக தயாரிக்கப்படும் பிரபலமானவர்களின் திரைப்பட இசை வெளியீட்டு விழாக்களையும் திரைப்பட அறிமுக விழாக்களையும் கல்வி நிறுவன வளாகங்களில் நடத்துவது கல்வி கற்கச் செல்லும் மாணவர்களுக்கு கேடு விளைவிக்கக் கூடியதே.! திரை அரங்கங்கள் கல்விக்கூடமாக மாற வேண்டுமே, தவிர கல்விக்கூடங்கள் திரை அரங்குகளாக மாறி விடக்கூடாது என்பதில் மக்களும், அரசும் கவனமாக இருக்க வேண்டும்.

cm stalin
cm stalinpt desk

யார் பேச்சாளர்கள் - ஒரு வரைமுறையை ஏற்படுத்த வேண்டும்

மாணவர்களின் எதிர்காலத்திற்கும் பொது சமூகத்திற்கும் எந்தவித பயனும் அளிக்காத திரைப்பட இசை வெளியீட்டு விழா மற்றும் அறிமுக விழாக்களை கல்வி நிறுவன வளாகங்களில் நடத்த அரசு தடை விதிக்க வேண்டும் என்பதோடு கல்வி நிறுவனங்களில் திரைக்கலைஞர்கள் மற்றும் சமூக ஊடக பிரபலங்கள் பங்கேற்று கருத்துரை வழங்க ஒரு வரைமுறையை ஏற்படுத்த வேண்டும் என்றும் தமிழக முதல்வர் அவர்களை நான் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன். என்று நடிகரும் இயக்குனருமான தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com