திண்டுக்கல்: விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய பெண் - ஓடிவந்து முதலுதவி செய்த மருத்துவர்

வத்தலகுண்டு அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த பெண்ணிற்கு ஓடிவந்து முதலுதவி செய்த மருத்துவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு விரைந்து உதவிய மருத்துவர் செல்வராஜ்
சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு விரைந்து உதவிய மருத்துவர் செல்வராஜ்pt desk
Published on

செய்தியாளர்: அஜ்மீர் ராஜா

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பேருந்து நிலையத்தில் காய்கறி கடை வைத்திருப்பவர் பாலமுருகன். இவர், தேனி மாவட்டம் கானாவிளக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது உறவினரை சந்தித்து விட்டு மீண்டும் தனது குடும்பத்துடன் இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பி உள்ளார். அப்போது பரசுராமபுரம் அருகே வந்தபோது பாலமுருகனின் மனைவி மணிமேகலை அணிந்திருந்த துப்பட்டா இருசக்கர வாகன சக்கரத்தில் சிக்கியுள்ளது.

மருத்துவர் செல்வராஜ்
மருத்துவர் செல்வராஜ்pt desk

இதனையடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் மணிமேகலை சாலையில் தூக்கி வீசப்பட்டார். இச்சம்பவத்தில் படுகாயம் அடைந்த மணிமேகலை உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வேளையில் அவ்வழியே வந்த கோயம்புத்தூரை சேர்ந்த பிரபல மருத்துவர் செல்வராஜ், தனது காரை நிறுத்தி ஓடி வந்து சாலையில் மயங்கி கிடந்த மணிமேகலைக்கு முதலுதவி செய்தார்.

சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு விரைந்து உதவிய மருத்துவர் செல்வராஜ்
”ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சிரிக்க வேண்டும்.. இது கட்டாயம்” ஜப்பானில் வந்த அதிரடி சட்டம்!

மேலும் 108 ஆம்புலன்ஸ் வரும் வரை அருகில் இருந்து கவனித்துக் கொண்ட மருத்துவர் செல்வராஜ், மணிமேகலையை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு மீண்டும் கிளம்பிச் சென்றார்.

மருத்துவர் செல்வராஜ்
மருத்துவர் செல்வராஜ்

மருத்துவரின் இச்செயல் பெரும் நிகழ்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் மணிமேகலைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com