தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, நேற்று பிப்ரவரி 21-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘கள்ள ஓட்டுப் புகார், வாக்கு எண்ணிக்கையில் வன்முறை அச்சம்... நியாயமானதா? ஊதிப் பெருக்கப்படுகிறதா?' எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே.
இனி அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் வாக்காளர் பட்டியலை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும்.
ஒருமுறை ஒரு வாக்கு சாவடியில் ஆதார் எண்ணுடன் இணைப்பு செய்த பின்னர் அதிகாரிகள் அரசியல் வாதிகள் நீக்கம் செய்ய முடியாது என அறிவிக்க வேண்டும். மரணம் அடைந்த பின்னர் முனிசிபாலிட்டி உள்ளாட்சி டெத் சர்டிபிகேட் ஆதார் எண்ணுடன் வரப் பெற்று இருந்தால் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்ய வேண்டும். வாடகை வீட்டில் இருப்பவர் அடிக்கடி வீடு மாற்றம் ஆனால் கூட இப்போது எந்த ரேஷன் கடைகளில் கூட பொருட்கள் வாங்கி கொள்ள முடியும். வங்கி கணக்கில் முகவரி மாற்றம் செய்யாமல் இருந்தால் கூட ஏடிஎம் மூலம் பணம் எடுக்க முடியும். வழக்கமாக உள்ள வங்கி சேவை தடை படாது.
வாடகை வீட்டில் இருப்பவர் கள் அடிக்கடி வீடு மாற்றம் ஆக வேண்டிய சூழ்நிலை இருக்கும். எனவே ஒரு தொகுதி யில் எந்த வாக்கு சாவடியிலும் ஓட்டு போட அனுமதி வேண்டும் வாக்காளர் ஆதார் ல விலாசம் மாற்றம் செய்து விண்ணப்பம் செய்தால் மட்டுமே பழய வாக்கு சாவடியில் பெயர் நீக்கம் செய்து புதிய வாக்கு சாவடியில் பெயர் சேர்க்க வேண்டும். அப்படி அவர் விண்ணப்பம் செய்யாத வரை பழய வாக்கு சாவடியில் வந்து வோட்டு போடவேண்டும். இப்படி செய்தால் தான் யாருடைய வாக்கும் பறி போகாது.நீக்கம் ஆகாது. இரண்டு இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் வராது. வாக்கு சதவீதம் அதிகரிப்பு ஆகும். கள்ள வாக்கு போடுபவர்கள் என்ற சந்தேகம் இருந்தால் ஆதார் கைரேகை மூலம் சரி பார்க்க முடியும்.
எனவே இதனை செயல்படுத்த தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை வைக்க வேண்டும்.
"நியாயமானதுதான்.. எதிர்கட்சிகள்.. தோல்வியடைஞ்சுடுவோம்னு... ஊதிபெருசாக்குறாங்க……!"
எப்போதும் போல அரசியல் கட்சிகள் தேர்தல் நேரங்களில் சொல்லப்படும் குற்றச்சாட்டுகளில் ஒன்று. எனவே கள்ள ஓட்டு என்பதெல்லாம் ஊதிப்பெருக்கப்படுகிறது. இதைப் பெரிதுப்படுத்த தேவையில்லை.
இதையெல்லாம் சொன்னா தானே தோற்றவர்கள் வெற்றிகரமான தோல்வியையே அடைந்தார்கள் என்று தொண்டர்களையும் மக்களையும் நம்ப வைக்க முடியும்.
நியமானது தட்டிக்கேட்க படவேண்டியது