குழந்தை சுர்ஜித் சிக்கியுள்ள ஆழ்துளைக் கிணறு அருகே 45 அடி வரை பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணிகள் 65 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. கடினமானப் பாறைகள் இருப்பதால் குழிதோண்டும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இப்போது மீட்புப் பணி 4-வது நாளாகத் தொடர்ந்து நடந்து வருகிறது.
ரிக் இயந்திரம் தொடர்ந்து குழி தோண்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. தற்போது 45 அடி வரை பள்ளம் தோண்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல் ரிக் இயந்திரம் 35 அடியும், இரண்டாவது ரிக் இயந்திரம் 10 அடியும் பள்ளம் தோண்டியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனிடையே 2-வது ரிக் இயந்திரம் பழுதடைந்துள்ளது. இயந்திரத்தில் உள்ள போல்டுகள் சேதமடைந்து இருப்பதால் தோண்டும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் மாற்று பாகங்கள் தயார் நிலையில் இருப்பதால் விரைவில் தோண்டும் பணி தொடங்கும் எனத் தெரிகிறது.