"சொத்த புடுங்கிட்டு மகன்கள் வெரட்டிட்டாங்க?" - பேருந்து நிலையத்தில் தஞ்சமடைந்த தம்பதி!

"சொத்த புடுங்கிட்டு மகன்கள் வெரட்டிட்டாங்க?" - பேருந்து நிலையத்தில் தஞ்சமடைந்த தம்பதி!
"சொத்த புடுங்கிட்டு மகன்கள் வெரட்டிட்டாங்க?" - பேருந்து நிலையத்தில் தஞ்சமடைந்த தம்பதி!
Published on

தந்தையின் சொத்தை ஏமாற்றி எழுதி வாங்கிக் கொண்டு பெற்றோரை கவனிக்காததால் தந்தை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தாலுகா கோடங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங்கசாமி (85) சாரதாம்பாள் (75) தம்பதியினர். இவர்களுக்கு 4 மகன்கள் உள்ள நிலையில், கடந்த 2009 ஆம் ஆண்டு தனது 4 மகன்களுக்கும் தலா 4 மா விவசாய நிலத்தையும், குடியிருக்க மனையையும் பிரித்து தங்கசாமி, சொத்து எழுதித் தந்துள்ளார். மேலும் தனக்கென 4 மா நிலத்தையும், ஒரு குடிசை வீட்டையையும் வைத்துக்கொண்ட தங்கசாமி அதில் விவசாயம் செய்து வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், சீர்காழி அரசு மருத்துவமனையில் மருந்தாளுனராக பணியாற்றிவரும் தங்கசாமியின் மூத்தமகன் உத்திராபதி தந்தையை ஏமாற்றி அவரது பாகத்தையும் தனது பெயரில் மாற்றி எழுதிக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் பின்னர், பெற்றோரை அவர்கள் இருந்த வீட்டில் இருந்து அடித்து விரட்டியுள்ளதாகவும் தெரிகிறது. இதுகுறித்து, பெரம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உத்திராபதி பொருட்படுத்தாமல் தனது பெற்றோரை தொடர்ந்து கொடுமைப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தங்கசாமி தனது சொத்துக்களை பெரிய மகனுக்கு மட்டும் எழுதித்தந்துவிட்டதால் அவரை பராமரிக்க மற்ற மகன்களும் மறுத்துவிட்டனர். இதைத் தொடர்ந்து தம்பதியினர் இருவரும் அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்திலேயே தங்கி தங்களது முதுமைக் காலத்தை கழித்து வருகின்றனர்.

இந்நிலையில், தங்களை ஏமாற்றி நிலத்தை எழுதி வாங்கிக்கொண்டு வீட்டை விட்டு துரத்திய மகன்மீது நடவடிக்கை எடுத்து, தங்களது நிலத்தை மீட்டுத்தர வலியுறுத்தி பாதிக்கப்பட்ட தம்பதியினர் மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, அம்மனுவின்மீது விசாரணை நடத்த மாவட்ட எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com