வேட்பு மனுவில் ஓபிஎஸ் தவறான தகவலை அளித்தாரா? விசாரிக்க 5 பேர் கொண்ட குழு

வேட்பு மனுவில் ஓபிஎஸ் தவறான தகவலை அளித்தாரா? விசாரிக்க 5 பேர் கொண்ட குழு
வேட்பு மனுவில் ஓபிஎஸ் தவறான தகவலை அளித்தாரா? விசாரிக்க 5 பேர் கொண்ட குழு
Published on

வேட்பு மனு தாக்கலின்போது ஓபிஎஸ், ரவீந்திரநாத் தவறான தகவல்கள் அளித்த வழக்கு தொடர்பாக விசாரிக்க குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் போடிநாயக்கனூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் 2021 இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது தாக்கல் செய்த வேட்பு மனுவில் தவறான தகவலை அளித்ததாகவும், சொத்து விபரங்களை மறைத்ததாகவும், இதேபோல 2019ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்ட ரவீந்திரநாத் தனது வேட்பு மனு தாக்கலில் தவறான தகவலை அளித்ததாகவும் சொத்து விவரங்களை மறைத்ததாகவும், அவர் நடத்தி வரும் நிறுவனங்கள் மீதான தகவலை வேட்பு மனு தாக்கலின்போது அவர் குறிப்பிடவில்லை என்றும், எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் தேனி மாவட்ட சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கை விசாரிக்கும் தனி நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி வழக்கை தாக்கல் செய்தார்

இந்த வழக்கை ஜனவரி 7ஆம் தேதி விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்தர்நாத் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்வதோடு, வழக்கைத் தொடர்ந்த மிலானிக்கு காவல் துறையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இவர்கள் மீதான வழக்கை விசாரிக்க தேனி மாவட்ட குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் சுந்தர்ராஜ் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கைத் தொடர்ந்த மிலானிக்கு, நீதிபதியின் உத்தரவின் பேரில் நான்கு பேர் கொண்ட காவலர் குழு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மீதும் அவரது மகனும் தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் மீதும் விசாரணை நடைபெற உள்ளது. இது அதிமுக வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com