மதுரையில் உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் மாணவிகள் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
கே.கே.நகர் நடைப்பயிற்சி கழகமும், அரவிந்த் கண் மருத்துவமனையும் இணைந்து இந்த விழிப்புணர்வு பேரணியை நடத்தின. 200க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் மருத்துவர்கள் இதில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நீரழிவு நோயினால் ஏற்படும் பாதிப்பை பற்றி விளக்கினர். மாநகராட்சி ஆணையர் அனீஷ் சேகர் இந்த பேரணியை தொடங்கி வைத்தார்.
மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கண் விழித்திரை பாதிப்பு வரும் என்பதால், தொடக்கத்திலேயே உரிய சிகிச்சை பெற வேண்டும், உணவு கட்டுபாட்டில் அக்கறை செலுத்த வேண்டும் போன்ற விழிப்புணர்வு வழி்முறைகளை மருத்துவர்கள் பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 ஆம் தேதி உலக நீரிழிவு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு பெண்களுக்கான நீரிழிவு தினமாக கடைப்பிடிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.