தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் சூரிய கிரகணத்தின் போது மக்கள் வெண்கல தட்டில் தண்ணீர் ஊற்றி உலக்கையை நிற்க வைத்து பார்ப்பார்கள். இந்த நிலையில் தருமபுரி அடுத்த, இலக்கியம்பட்டி, அன்னசாகரம் பகுதியில் உள்ள சிறுவர்கள், கிரகணத்தின் போது உலக்கையை ஆட்டுக்களில் வைத்தனர். அப்போது உலக்கை நேராக நின்றது. அப்பொழுது கிரகணம் தோன்றியதாக உறுதிப்படுத்தினர். மேலும் சூரிய கிரகணம் முடிந்தவுடன் தானகவே உலக்கை கீழே விழுந்து விட்டது. இவ்வாறு இன்றைய சூரிய கிரகணத்தை சிறுவர்கள் மற்றும் அபபகுதி பொது மக்களும் உலக்கை ஆட்டுக்கல்லில் நேராக நிற்பதை பார்த்து ரசித்தனர்.