தருமபுரி: ரயில் தண்டவாளம் அருகே சிதறிக்கிடந்த 2000, 500 ரூபாய் மாதிரி நோட்டுகள்

தருமபுரி: ரயில் தண்டவாளம் அருகே சிதறிக்கிடந்த 2000, 500 ரூபாய் மாதிரி நோட்டுகள்
தருமபுரி: ரயில் தண்டவாளம் அருகே சிதறிக்கிடந்த 2000, 500 ரூபாய் மாதிரி நோட்டுகள்
Published on

தருமபுரி அருகே ரயில் தண்டவாளத்தில் கட்டுக் கட்டாக 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வீசப்பட்டிருந்தன. கள்ள நோட்டை புழக்கத்தில் விட எடுத்துச் செல்லப்பட்டதா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே பெங்களூர் சேலம் செல்லும் ரயில் தடத்தில், ரயில்வே ஊழியர் ராம்குமார் என்பவர் பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, தொப்பூரில் இருந்து சேலம் செல்லும் ரயில் பாதையில் 2000, 500 ரூபாய் நோட்டுகள் பரவலாக சிதறிக்கிடந்துள்ளன. இதை கண்ட ரயில்வே ஊழியர் ராம்குமார் தருமபுரி ரயில்வே காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தருமபுரி ரயில்வே காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் வெங்கடாசலம் உள்ளிட்ட காவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ரயில் தண்டவாளத்தின் அருகே 2000, 500 ரூபாய் நோட்டுகள் பரவலாக சிதறிக்கிடந்துள்ளன. மேலும் தண்டவாளத்தின் அருகே பெட்டியில் கட்டுக் கட்டாக 2000, 500 ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளது.

ஆனால், இந்த தாள்களின் நடுவே கார்ட்டூன் படம் அச்சிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து ரயில்வே காவல் துறையினர் கட்டுக் கட்டாக சிதறிக்கிடந்த நோட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த தாள்கள் முழுவதும் குழந்தைகள் விளையாடுவதற்கு பயன்படுத்துவது மற்றும் சினிமா துறையில் பயன்படுத்துவதற்கான ரூபாய் நோட்டுகளில் மாதிரி தான். ஆனால் பெரிய பெட்டியில் கட்டுக் கட்டாக எடுத்துச் சென்றதால், எங்கேனும் புழக்கத்தில் விடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதையடுத்து இந்த ரூபாய் மாதிரியான தாள்கள், ரூபாய் நோட்டுகள் போல் இருப்பதால், கள்ள நோட்டுகளாக புழக்கத்தில் விடவும் வாய்ப்புள்ளது. இதனால் இந்த தாள்கள் எந்த ரயிலிலிருந்து வீசப்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என ரயில்வே காவல்துறை ஆய்வாளர் பொறுப்பில் உள்ள ரத்தினகுமார் தெரிவித்தார். தொடர்ந்து ரயில் தண்டவாளத்தில் ரூபாய் நோட்டு மாதிரியான தாள்கள் சிதறிகிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com