அரூரில் இலங்கை தமிழர்கள், திருநங்கைகள் உட்பட 250 பேருக்கு கொரோனா நிவாரண பொருட்களை தனியார் நிறுவனத்தினர் வழங்கினர்.
நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் வேலை வாய்ப்பில்லாமல், பல்வேறு குடும்பத்தினர் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தருமபுரி மாவட்டம் அரூர் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில், தனியார் நிறுவனங்கள் மற்றும் லயோலா பயிற்சி மையத்தின் சார்பில், திருநங்கைகள், இலங்கை தமிழர்கள், நலிந்த குடும்பத்தை சேர்ந்த 250 பேருக்கு கொரோனா நிவாரண உதவிகளை கோட்டாட்சியர் முத்தையன் வழங்கினார்.
இதில், கொரோனா நிவாரண பொருட்களாக 25 கிலோ அரிசி, பருப்பு, எண்ணைய், சர்க்கரை உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அனைவரும் முகக்கவசம் அனிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்களை பெற்றுச் சென்றனர்.